அரசியல்

Fancy Dress போட்டியா? - நாடாளுமன்ற ஊழியர்கள் 600 பேருக்கு ரூ.25,000 பிடித்தம் செய்த ஒன்றிய அரசு !

நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியாளர்களின் ‘சீருடை’க்காக 600 பேரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.25,000 ஒன்றிய அரசு பிடித்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

Fancy Dress போட்டியா? - நாடாளுமன்ற ஊழியர்கள் 600 பேருக்கு ரூ.25,000 பிடித்தம் செய்த ஒன்றிய அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், தற்போது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, துன்பப்படுத்தி வரும் ஆளுங்கட்சியான பாஜவை ஓரங்கட்ட, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது. அந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு 'இந்தியா' என்று பெயரும் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 4-வது கூட்டத்தொடர் அடுத்து நடைபெறவுள்ள நிலையில், பாஜக பெரும் பீதியில் உள்ளது. ஏனெனில் அண்மையில் நடைபெற்ற 6 மாநிலங்களின் 7 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 4 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. அதுமட்டுமின்றி இந்தியா கூட்டணி காரணமாக நாட்டின் பெயரை பாஜக மாற்ற துடிக்கிறது.

Fancy Dress போட்டியா? - நாடாளுமன்ற ஊழியர்கள் 600 பேருக்கு ரூ.25,000 பிடித்தம் செய்த ஒன்றிய அரசு !

இந்த சூழலில் நாடு முழுவதும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டு வரப்போவதாக பாஜக தலைமைகள் பேசி வருகிறது. இதற்கு நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சிகள் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவே நாடாளுமன்ற தேர்தல் தேதி சீக்கிரம் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதிரியான சூழ்நிலையில், தற்போது நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் நடைபெறுகிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த சிறப்பு கூட்டத்தொடரில் நேற்று மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முதல் நாள் கூட்டம் பழைய கட்டடத்தில் நடைபெற்ற நிலையில், நேற்றில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வருகிறது.

Fancy Dress போட்டியா? - நாடாளுமன்ற ஊழியர்கள் 600 பேருக்கு ரூ.25,000 பிடித்தம் செய்த ஒன்றிய அரசு !

இந்த நிலையில், புதிய நாடாளுமன்றத்தின் காவலர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 'தாமரை மலர்' பொறித்த புதிய சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதால் அனைவர் மத்தியிலும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது நாடாளுமன்ற பணியாளர்கள் உடுக்கும் தற்போதைய சபாரி உடைகளுக்குப் பதிலாக ஆண் பணியாளர்களுக்கு குர்தா, பைஜாமாவும், பெண் பணியாளர்களுக்கு புடவையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இதனை தேசிய ஆடைவடிவமைப்பு கல்வி நிறுனமான நிப்ட் வடிவமைத்துள்ளது.

புதிய சீருடைகளில் தாமரை மலர் இடம்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அங்கிருக்கும் பணியாளர்கள் இதனை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில் பணியாளர்கள் தங்கள் ஆடைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் அவர்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Fancy Dress போட்டியா? - நாடாளுமன்ற ஊழியர்கள் 600 பேருக்கு ரூ.25,000 பிடித்தம் செய்த ஒன்றிய அரசு !

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆட்சியாளரை மகிழ்விப்பதற்காக பாதுகாப்புப் பணியாளர்களை காட்சிப் பொருளாக மாற்றியது மட்டுமல்லாமல், இந்த ‘சீருடை’க்காக நாடாளுமன்றப் பாதுகாப்புப் பணியாளர்கள் 600 பேரின் சம்பளத்தில் இருந்து தலா ரூ.25,000 பிடித்துள்ளது ஒன்றிய அரசு. ஆட்சியாளரின் 'Fancy Dress' போட்டிக்காக நமது பாதுகாப்பு பணியாளர்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?" என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories