அரசியல்

“தெலங்கானாவிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - அமைச்சர் முதல் MP வரை.. பிரதமருக்கு குவியும் கண்டனம் !

ஆந்திரா - தெலங்கானா பிரிவு குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

“தெலங்கானாவிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - அமைச்சர் முதல் MP வரை.. பிரதமருக்கு குவியும் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (18.09.2023) தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் நாளான நேற்று பழைய நாடாளுமன்றத்தில் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர். மேலும் பிரதமர் மோடியே உரையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் இந்திய நாடு, நாடாளுமன்றம் உள்ளிட்டவைகளை பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார்.

மேலும் அவர் பேசுகையில், முன்னாள் பிரதமர்கள் நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்றோர் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்தார். அதோடு சுதந்திர இந்தியாவின் பல்வேறு பாரம்பரியங்களின் நினைவாக பழைய நாடாளுமன்றம் உள்ளதாக தெரிவித்த அவர், இந்திய நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்து பெருமிதம் கொள்வதாகவும் கூறினார்.

“தெலங்கானாவிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - அமைச்சர் முதல் MP வரை.. பிரதமருக்கு குவியும் கண்டனம் !

தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பற்றி பேசிய அவர், தெலங்கானா - ஆந்திர மாநில பிரிவுகளை பற்றியும் பேசினார். இதுகுறித்து பேசிய அவர், “ஆந்திரா மற்றும் தெலங்கானா பிரிக்கப்பட்டது, மிகவும் கசப்பான நிகழ்வாகும். இந்த நிகழ்வின்போது பலபேர் உயிர் நீத்தனர். இது பலரது இரத்தக்களரிக்கு வழிவகுத்தது. இதனால் தெலங்கானாவோ, ஆந்திராவோ அந்த பிரிவை கொண்டாட முடியவில்லை” என்றார்.

அதோடு, தெலங்கானா பிரிக்கப்பட்டதை தெலங்கானா மக்கள் குறித்தும் மிகவும் இழிவாக பேசினார். மேலும் மக்கள் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக பேசினார். தொடர்ந்து "மத்தியப் பிரதேசத்தில் இருந்து சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட், பீகாரில் இருந்து ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்கள் உருவானபோது பாஜக ஆட்சியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால் இவர்களால் கொண்டாடமுடியவில்லை" என்றார்.

“தெலங்கானாவிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - அமைச்சர் முதல் MP வரை.. பிரதமருக்கு குவியும் கண்டனம் !

பிரதமரின் இந்த பேச்சுக்கு தெலங்கானாவில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இதுகுறித்து தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகனும், ஐடி அமைச்சருமான கே.டி.ராமாராவ், "தெலுங்கானா மாநிலத்தை பிரித்ததை கொண்டாடவில்லை என்று கூறுவது உண்மையில் தவறானது. பிரதமரின் இந்த பேச்சு அறியாமை மற்றும் திமிர்பிடித்ததாக தெரிகிறது.

காங்கிரஸை விமர்சிக்கும் முயற்சியில் பிரதமர் மோடி, தெலங்கானா மக்களின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் புண்படுத்துகிறார். முக்கியமான பதவிகளில் இருக்கும் அரசியல் தலைவர்கள், மக்களின் உணர்ச்சிகள், தியாகங்களைக் கருத்தில் கொண்டு, உணர்வுப்பூர்வமான வரலாற்று விஷயங்களை அனுதாபத்துடன் அணுக வேண்டும்.

ஆறு தசாப்த கால போராட்டத்திற்குப் பிறகு ஜூன் 2, 2014 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. தெலங்கானா மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் தனது மாநில அந்தஸ்து தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு பத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக, மாநிலம் 21 நாட்களில் பல்வேறு வகையான செயல்பாடுகளை திட்டமிட்டுள்ளது.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தெலங்கானாவிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்..” - அமைச்சர் முதல் MP வரை.. பிரதமருக்கு குவியும் கண்டனம் !

தொடர்ந்து ராகுல் காந்தி எம்.பி, "தெலுங்கானாவின் தியாகிகளையும், அவர்களின் தியாகத்தையும் அவமதிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசியது, தெலுங்கானா மாநிலத்தின் சுயமரியாதையை அவமதிக்கும் செயலாகும். அம்மாநில மக்களிடையே பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தற்போது இணையத்தில் '#PMshouldApologisetoTelangana' என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories