அரசியல்

மகளிர் 33% இடஒதுக்கீடு: “வழக்கம்போல் இதுவும் பாஜகவின் தேர்தல் நாடகம்..” - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் !

தேர்தல் வருவதை முன்னிட்டே ஒன்றிய பாஜக அரசு மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக எதிக்கட்சிகள் விமர்சித்து வருகிறது.

மகளிர் 33% இடஒதுக்கீடு: “வழக்கம்போல் இதுவும் பாஜகவின் தேர்தல் நாடகம்..” - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று (18.09.2023) தொடங்கி வரும் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் நாளான நேற்று பழைய நாடாளுமன்றத்தில் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர். தொடர்ந்து இன்று முதல் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை பிரதமர் மோடி தாக்கல் செய்தார். இந்த மசோதாவானது பல ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த கோரிக்கையாகும். முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் ஆட்சியில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், போதிய ஆதரவு பெறவில்லை என்பதால் இது சட்டமாக ஆக்கப்படாமலே இருந்து வந்துள்ளது.

மகளிர் 33% இடஒதுக்கீடு: “வழக்கம்போல் இதுவும் பாஜகவின் தேர்தல் நாடகம்..” - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் !

இந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய ஆதரவு தெரிவித்தாலும், இந்த மசோதாவை பாஜக இப்பொது தாக்கல் செய்வதற்கு அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல்தான் காரணம் என விமர்சித்து வருகிறது.

அது மட்டுமின்றி, இந்த மசோதாவானது தற்போது தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அமல்படுத்த வேண்டுமென்றால், முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்; அதன்பிறகு தொகுதி மறுவரையறையும் செய்ய வேண்டும். பின்னரே மகளிருக்கான தொகுதி பங்கீட்டை முறைப்படுத்த முடியும். எனினும் இது தற்போது நடக்க சாத்தியமில்லாத ஒன்று. எனவே இது வேறு கண்துடைப்பு என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மகளிர் 33% இடஒதுக்கீடு: “வழக்கம்போல் இதுவும் பாஜகவின் தேர்தல் நாடகம்..” - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் !

இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி அளித்த பேட்டியில், "நாடாளுமுன்ற தேர்தலை மனதில் வைத்தே மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா செயல்பாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை இல்லை. அனைத்து பெண்களின் எதிர்பார்ப்புகளையும் நொறுக்கக்கூடிய மசோதாவாக இது உள்ளது. பிரதமர் மோடி சொல்வதுபோல் பெண்களுக்கு சக்தி தரக்கூடிய மசோதாவாக நிச்சயம் இது இல்லை." என்றார்.

மேலும் மகளிர் இடஒதுக்கீடு குறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் சவுத்ரி பேசுகையில், "மகளிர் மசோதாவை முதலில் நிறைவேற்றியது காங்கிரஸ். மகளிர் இட ஒதுக்கீடு மசோதா டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியில் மாநிலங்களைவையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் மகளிர் மசோதா நிறைவேற்றக் கேட்டு நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மகளிர் மசோதா நிறைவேற்ற வேண்டுமென்ற எங்களின் கோரிக்கையை வலியுறுத்துகிறோம்." என்றார்.

மகளிர் 33% இடஒதுக்கீடு: “வழக்கம்போல் இதுவும் பாஜகவின் தேர்தல் நாடகம்..” - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் !

தொடர்ந்து இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், "2021ம் ஆண்டு எடுத்திருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை இன்னும் பாஜக எடுக்கவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்காத ஒரே ஜி20 நாடு இந்தியாதான். இப்போது பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றிவிட்டு அதற்குப் பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு அதற்குப் பிறகு தொகுதி மறுவரையறை தீர்மானிக்கப்பட்டு அதற்குப் பிறகுதான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமென மசோதா சொல்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பும் தொகுதி மறுவரையறையும் 2024ம் ஆண்டு தேர்தல்களுக்கு முன் நடக்க வாய்ப்பில்லை. அடிப்படையில் இன்றைய தலைப்புச் செய்திகளை இம்மசோதா பற்றிய செய்தி நிறைக்கும். அது அமல்படுத்தவென தோராயமாக ஒரு தேதி அறிவிக்கப்படும். வழக்கம்போல் இதுவும் பாஜகவின் தேர்தல் உத்திதான்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories