அரசியல்

"பெயரை மாற்ற இந்தியா ஒன்றும் பாஜகவின் அப்பா வீட்டுச் சொத்து இல்ல" - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம் !

பெயரை மாற்ற இந்தியா ஒன்றும் பாஜகவின் அப்பா வீட்டுச் சொத்து இல்லை என பாஜகவை அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

"பெயரை மாற்ற இந்தியா ஒன்றும் பாஜகவின் அப்பா வீட்டுச் சொத்து இல்ல" - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான ஒன்றிய அரச ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைச் செயல்படுத்தி வருவதாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதை உறுதி செய்யும் வகையில்தான் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது கூட ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பா.ஜ.க கையில் எடுத்துள்ளது. மேலும் இந்தியாவின் பெயரையும் பாரத் என்று மாற்ற முயல்கிறது. இந்த மற்றத்திற்கு காரணம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் இணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளதுதான். இந்த பெயைரை எதிர்க்கட்சிகள் வைத்ததில் இருந்தே பாஜகவினர் இந்தியா என்ற பெயரை தவிர்த்து பாரத் என்று சொல்லி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஜி-20 மாநாட்டில் இந்தியா என்ற பெயருக்கு பதில், பாரத் என்ற பெயரை மோடி வைத்திருந்தார். மேலும் வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில், இந்தியா என்ற பெயர் நீக்கப்பட்டு பாரத் என வைக்கும் மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்யலாம் என பேசப்பட்டு வருகிறது.

"பெயரை மாற்ற இந்தியா ஒன்றும் பாஜகவின் அப்பா வீட்டுச் சொத்து இல்ல" - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம் !

இந்த நிலையில், பெயரை மாற்ற இந்தியா ஒன்றும் பாஜகவின் அப்பா வீட்டுச் சொத்து இல்லை என பாஜகவை அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "கடந்தாண்டு வரை பாஜக அரசு இந்தியா என்ற பெயரில் பல திட்டங்களை கொண்டுவந்தது. ஆனால், இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர்ந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியதும் அதற்கு பயந்து நாட்டின் பெயரை மாற்ற பாஜக முயல்கிறது.

இந்தியா ஒன்றும் பாஜகவின் அப்பா வீட்டுச் சொத்து இல்லை. இந்தியா 140 கோடி மக்களுக்கும் சொந்தமானது. இந்தியா, பாரத், ஆகிய பெயர்கள் நமது இதயங்களில் வாழ்கிறது. நான் பாஜகவுக்கு வெளிப்படையாகவே சவால் விடுக்கிறேன். முடிந்தால் அவர்களுக்குத் தைரியம் இருந்தால் இந்தியாவின் பெயரை மாற்றட்டும். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories