அரசியல்

”போபாலில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்” : டெல்லியில் டி.ஆர்.பாலு MP பேட்டி!

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் போபாலில் நடைபெறுகிறது என டி.ஆர்.பாலு எம்.பி தெரிவித்தள்ளார்.

”போபாலில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்” :  டெல்லியில் டி.ஆர்.பாலு MP பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. மேலும் தேர்தலுக்கான வியூகத்தையும் வகுத்து வருகின்றனர். இவர்களின் முதல் வெற்றியாக தங்களது கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் "இந்தியா" என வைத்துள்ளது பா.ஜ.கவிற்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற ஒரே கருத்துடன் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது பா.ஜ.கவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நான்கு கூட்டங்களை நடத்தி 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்ட ஐந்து குழுக்களை இந்தியா கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

”போபாலில் இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்” :  டெல்லியில் டி.ஆர்.பாலு MP பேட்டி!

இந்த கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு எம்.பி, " இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில வாரியாக கட்சிகள் ஆலோசனை செய்து வேட்பாளர்களை இறுதி செய்வார்கள். முதற்கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்படும். பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் முடிவு செய்யப்படும்.

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அக்டோபர் முதல் வாரம் போபாலில் நடைபெறுகிறது. மேலும் சென்னை, பாட்னா, கவுகாத்தி, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டங்களில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியா கூட்டணி குறித்து தவறான செய்திகள் வெளியிடும் ஊடகங்களில் இந்தியா கூட்டணியின் பேச்சாளர்கள் பங்கேற்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories