அரசியல்

”தமிழ்நாட்டில் மத ரீதியிலான அரசியல் செய்ய பா.ஜ.க முயற்சி”.. கபில் சிபல் குற்றம்சாட்டு!

தமிழ்நாட்டில் மத ரீதியிலான அரசியல் செய்ய பா.ஜ.க முயற்சி செய்கிறது என ஒன்றிய முன்னாள் அமைச்சர் கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

”தமிழ்நாட்டில் மத ரீதியிலான அரசியல் செய்ய பா.ஜ.க முயற்சி”.. கபில் சிபல் குற்றம்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் மத ரீதியிலான அரசியல் செய்ய பா.ஜ.க முயற்சி செய்கிறது என்றும் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு குறித்து பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும் என ஒன்றிய முன்னாள் அமைச்சர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்த கபில் சிபல், "பல ஆண்டுகளாக அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில் மத ரீதியான மோதல்களை ஏற்படுத்த பா.ஜ.க முயல்கிறது. இதற்காகத்தான் தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ஆர்.என்.ரவியை பா.ஜ.க அனுப்பியுள்ளது.

”தமிழ்நாட்டில் மத ரீதியிலான அரசியல் செய்ய பா.ஜ.க முயற்சி”.. கபில் சிபல் குற்றம்சாட்டு!

தமிழ்நாட்டில் ஆர்.என்.ரவி என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று பிரதமர் மோடிக்கும், அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரியாதா?. அவர்களுக்கு நன்றாகவே தெரியும். இப்படியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாகவே இவர்கள்தான் இருக்கிறார்கள்.

ஆளுநர் அரசியலில் ஈடுபடலாம் என அரசியலமைப்பு சட்டம் சொல்கிறதா? தமிழ்நாட்டில் மதவாத அரசியலை முன்னெடுப்பதுதான் ஆளுநரின் வேலையா?. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரின் அரசியல் திட்டத்தைத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் முன்னெடுத்து வருகிறார்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories