அரசியல்

ஜி-20 கூட்டமைப்பின் முக்கியத்துவம் என்ன? இந்தியாவுக்கு தலைமைபொறுப்பு கிடைத்தது எப்படி? முழு விவரம் உள்ளே!

இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

ஜி-20 கூட்டமைப்பின் முக்கியத்துவம் என்ன? இந்தியாவுக்கு தலைமைபொறுப்பு கிடைத்தது எப்படி? முழு விவரம் உள்ளே!
Vajiram and Ravi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 1999-ம் ஆண்டு ஜி-20 கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் உலகின் 19 வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டமைப்பே உலகின் மிகப்பெரிய பொருளாதார மற்றும் சக்திவாய்ந்த கூட்டமைப்பாகக் கருதப்படுகிறது.

உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் 80% பங்களிப்பையும், மக்கள் தொகையில் 75 % பங்களிப்பையும் கொண்டுள்ளன. இந்த கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஆண்டுதோரும் ஒரு இடத்தில் ஒன்றுகூடி தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பர்.

ஆண்டுதோரும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படும். அந்த வகையில் இந்த முறை இந்த ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டுக்கான ஜி-20 கூட்டமைப்பு மாநாடு இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரும் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

ஜி-20 கூட்டமைப்பின் முக்கியத்துவம் என்ன? இந்தியாவுக்கு தலைமைபொறுப்பு கிடைத்தது எப்படி? முழு விவரம் உள்ளே!
Alan Santos

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சௌதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதே நேரம் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என கூறியுள்ளார்.

மேலும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்தும் இன்னும் இறுதிமுடிவு அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் இந்த மாநாட்டை நடத்தும் இந்தியா, ஜி 20 கூட்டமைப்பில் இல்லாத ஸ்பெயின், வங்கதேசம், மொரிஷியஸ், எகிப்து, நெதர்லாந்து, ஓமன், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கும் பார்வையாளர்களாக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories