அரசியல்

நாட்டிலேயே முதலிடம்.. CVC அறிக்கையில் அமித்ஷாவின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மீது குவிந்த ஊழல் புகார்கள்!

மத்திய விஜிலென்ஸ் கமிஷன் வெளியிட்டிருக்கும் ஆண்டறிக்கையில் ஒன்றிய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராகவே அதிக புகார்கள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே முதலிடம்.. CVC அறிக்கையில் அமித்ஷாவின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மீது குவிந்த ஊழல் புகார்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்த கட்சி மீது ஏராளமான குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. ஆனால், அது குறித்த விசாரணைக்கு கூட உத்தரவிடாமல் பாஜக அரசு தனது ஊழல்களை அப்பட்டமாக மறைத்து வருகிறது. மேலும், எதிர்க்கட்சிகள் மேல் ஊழல் குற்றசாட்டுகளை சுமத்தி அந்த கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தனது பக்கம் இழுத்து வருகிறது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கூட ரபேல் விமான கொள்முதலில் ஊழல் நடந்ததாக பிரான்ஸ் அரசியல் கட்சிகள் முதல் இந்திய எதிர்க்கட்சிகள் வரை குற்றம் சாட்டின. ஆனால், இது குறித்த வழக்கில் பாதுகாப்பு காரணங்களால் கொள்முதல் விலை குறித்த விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அந்த ஊழலை அப்படியே மூடி மறைத்தது பாஜக அரசு.

அதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் பாஜக அரசால் ஏராளமான முறைகேடுகள் நடந்து இதன் மூலம் பல லட்ச கோடி அளவு ஊழல் நடந்ததாக சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுயிருந்தது. இதன்மீது உரிய விசாரணை நடத்தவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளன.

நாட்டிலேயே முதலிடம்.. CVC அறிக்கையில் அமித்ஷாவின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் மீது குவிந்த ஊழல் புகார்கள்!

இந்த நிலையில், மத்திய விஜிலென்ஸ் கமிஷன் வெளியிட்டிருக்கும் ஆண்டறிக்கையில் ஒன்றிய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராகவே அதிக புகார்கள் வந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய விஜிலென்ஸ் கமிஷன் ( CVC ) மத்திய அரசின் துறைகள் மற்றும் அவற்றின் அமைப்புகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்மீது கடந்த ஆண்டில் மட்டும் பெறப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள் குறித்த அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் செயல்படும் ஒன்றிய உள்துறை அமைச்சக ஊழியர்கள் மீதுதான் அதிக அளவில் (46,643 புகார்கள் )ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக ரயில்வே ஊழியர்களுக்கு எதிராக 10,580 புகார்களும், வங்கி ஊழியர்களுக்கு எதிராக 8,129 புகார்களும் வந்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் மட்டும் மொத்தமாக 1,15,203 புகார்கள் வந்திருப்பதாகவும், இதில், 85,437 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 29,766 புகார்கள் நிலுவையிலேயே இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories