அரசியல்

தலைகீழாக பறந்த தேசிய கொடி : “இதுதான் உங்க தேசப்பற்றா?” - பாஜக துணை முதல்வரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்டு ஊர்வலம் சென்ற உத்தரபிரதேச துணைமுதல்வர் பிரிஜேஷ் பதாக்கிற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தலைகீழாக பறந்த தேசிய கொடி : 
“இதுதான் உங்க தேசப்பற்றா?” - பாஜக துணை முதல்வரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு துணை முதல்வராக பிரிஜேஷ் பதாக் இருந்து வருகிறார். இவர் செய்த காரியம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி கண்டங்களுக்கும், கேலிகளுக்கும் உள்ளாகியுள்ளது. தேசப்பற்று என்றால் நாங்கள் என்று மார்தட்டி கொள்ளும் பாஜகவின் முக்கிய பிரதிநிதி, தேசிய கொடியை தலைகீழாக பிடித்து ஊர்வலம் வந்துள்ளார் அதுவும் சுதந்திர தினத்தன்றே..

தலைகீழாக பறந்த தேசிய கொடி : 
“இதுதான் உங்க தேசப்பற்றா?” - பாஜக துணை முதல்வரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

பொதுவாக பாஜகவினர் இந்தியாவிலேயே தாங்கள் தான் தேசபக்தி உள்ளவர்கள் என்றும், இந்தியா தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி வருகின்றனர். நாட்டுக்கு நல்லது செய்ததாகவும், மக்களுக்கு நல்லது செய்வதாகவும் போலியான வாக்குறுதியை கூறி, அதனை நிறைவேற்றாமலே ஓபி அடித்து வருகின்றனர். நேற்று நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

தலைகீழாக பறந்த தேசிய கொடி : 
“இதுதான் உங்க தேசப்பற்றா?” - பாஜக துணை முதல்வரை வறுத்தெடுக்கும் இணையவாசிகள்!

இதற்காக காலையிலேயே பிரதமர் மோடி டெல்லியில் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து நாட்டின் தேசப்பற்று குறித்து தனது உரையில் பேசி வந்தார். இவர் மட்டுமின்றி பாஜகவினர் நேற்று அனுசரிக்கப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்ததோடு, ஆங்காங்கே கொடியேற்றி இனிப்புகளையும் வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் தங்கள் தேசப்பற்றை வெளியுலகுக்கு காட்டும் வகையில் உத்தர பிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதாக் தனது பகுதியில் ஊர்வலம் சென்றார். தொடர்களுடன் பாடல் ஒலிக்க தேசிய கொடியை பறக்கவிட்டவாறே காரில் சென்றார். அப்போது அவரது கையில் இருந்த தேசிய கொடி தலைகீழாக கட்டப்பட்டிருந்தது.

அதாவது பச்சை நிறம் கீழே இருப்பதற்கு பதில் மேலே இருந்தது. இப்படி தலைகீழாக கொடியை பறக்கவிட்டவாறே பல மணி நேரம் ஊர்வலமாக வந்தார். அவருடன் வந்தவர்களும் அதுகுறித்து அவரிடம் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர்களுக்கு கூட தேசப்பற்று அவ்வளவு தானோ என்னமோ. பாஜக துணை முதல்வரின் இந்த செயல் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இணையவாசிகள் மத்தியில் கண்டங்களை எழுப்பி வருகிறது.

இதுதான் உங்கள் தேசப்பற்றா என தொடர்ந்து வசைபாடி வருகின்றனர். இதுகுறித்து அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories