அரசியல்

“டூப்ளிகேட் தலைவர்கள்.. MP, MLA-க்கள் இல்லாத கட்சிகள்” : மோடியின் NDA கூட்டணியின் லட்சணம் இதுதான்!

எதிர்க்கட்சிகளின் இத்தகைய நடவடிக்கையால் பீதியில் உள்ள பா.ஜ.க, தங்களால் வெட்டிவிடப்பட்டு, தங்களை விட்டு ஓட்டம் பிடித்த பழைய கூட்டணி கட்சிகளை கெஞ்சி கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.

“டூப்ளிகேட் தலைவர்கள்.. MP, MLA-க்கள் இல்லாத கட்சிகள்” : மோடியின் NDA கூட்டணியின் லட்சணம் இதுதான்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

வரும் 2024-ல் நாடே எதிர்பார்க்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து வியூகம் அமைத்து வருகின்றனர்.

குறிப்பாக, மோடி ஆட்சி செய்த இந்த 9 ஆண்டுகளில் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்வாதரம் முற்றிலும் சிதைந்துள்ளது. மத மோதல்கள் அதிகரித்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் உயர்ந்திருக்கிறது. மேற்கூறிய அத்தகைய அவலநிலைக்கும் மோடி அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் எனவும் கூறப்படுகிறது.

அதேவேளையில் மோடி ஆட்சிக்கு இருந்த வாக்கு வங்கி கணிசமாக குறைந்திருப்பையும் பார்க்க முடிகிறது. வாக்குவங்கியை அதிகரிக்க முடியாமல் திணறும் பா.ஜ.க குறுக்குவழியில் ஆட்சியைக் கைப்பற்ற தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது.

“டூப்ளிகேட் தலைவர்கள்.. MP, MLA-க்கள் இல்லாத கட்சிகள்” : மோடியின் NDA கூட்டணியின் லட்சணம் இதுதான்!

குறிப்பாக பா.ஜ.க-வால் நுழைய முடியாத அல்லது ஆட்சிக்கு வரமுடியாத மாநிலங்களில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற அரசின் அமைப்புகள் மூலம் அரசுக்கும், முக்கிய கட்சிகளுக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறது. இதில் பணிந்த பலரும் தற்போது மோடியின் என்.டி.ஏ கூட்டணியில் தவழ்ந்து கிடக்கின்றனர்,

இதுஒருபுறம் என்றால் குதிரைபேரம் மூலம் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி வாடகைக்கு ஆட்சி செய்து வரும் சித்து வேலையும் பா.ஜ.க செய்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா, அசாம் போன்ற மாநிலங்களில் ஆளும் கட்சி முக்கிய நபர்களை குறிவைத்து தூக்கி ஆட்சியை தக்க வைத்துள்ளனர்.

நாடுமுழுவதும் எழுந்துள்ள மோடி அரசுக்கு எதிரான எதிர்ப்பு நிலையை மேலும் வலுசேர்க்க, காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட 26 முக்கிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. அந்தவகையில், 2024 தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக கடந்த ஜூன் 23 அன்று அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், பா.ஜ.க-வைத் தோற்கடிக்கும் வகையில், 2024 மக்களவைத் தேர்தலை எதிர்க்கட்சிகள் கூட்டாக சந்திக்க முடிவெடிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக பொதுவான செயல்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக அடுத்த கட்டத்தில் விவாதிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படியே எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம், ஜூலை 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது.

“டூப்ளிகேட் தலைவர்கள்.. MP, MLA-க்கள் இல்லாத கட்சிகள்” : மோடியின் NDA கூட்டணியின் லட்சணம் இதுதான்!

அந்தக் கூட்டத்தில், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வைத் தோற்கடிப்போம்; இந்திய அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி உள்ளிட்ட விழுமியங்களைப் பாதுகாப்போம் என பா.ஜ.கவுக்கு எதிராக 26 எதிர்க்கட்சிகளைக் கொண்ட புதிய கூட்டணி உதயமாகி இருப்பதாகவும், இந்தக் கூட்டணிக்கு, ‘இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி’ (Indian National Developmental Inclusive Alliance) என பெயரிடப் பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.

மேலும், “எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க டெல்லியில் செயலகம் அமைக்கப்படும். எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்பட 11 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டம் அதாவது எதிர்க்கட்சிகளின் 3-வது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்துக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். அதே போல ஒருங்கிணைப்பு குழுவில் இடம்பெற்றுள்ள 11 பேரின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும். மும்பையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பது, தொகுதி பங்கீட்டு உள்ளிட்ட விவரங்கள் விவாதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

“டூப்ளிகேட் தலைவர்கள்.. MP, MLA-க்கள் இல்லாத கட்சிகள்” : மோடியின் NDA கூட்டணியின் லட்சணம் இதுதான்!

இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இத்தகைய நடவடிக்கையால் பீதியில் உள்ள பா.ஜ.க, தங்களால் வெட்டிவிடப்பட்ட மற்றும் விட்டால் போதும் என தங்களை விட்டு ஓட்டம் பிடித்த பழைய கூட்டணி கட்சிகளை கெஞ்சி கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்ற அன்றே டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இதில் 38 கட்சிகள் கலந்துகொண்டதாக பா.ஜ.க கூறுகிறது. அதுவும் வாஜ்பாய் காலத்தில் கூட 28 கட்சிகள்தான் கூட்டணியில் இருந்தன; ஆனால், மோடி ஆட்சியில் அதைக்காட்டிலும் அதிகமாக 38 கட்சிகள் இருப்பதாக பா.ஜ.க. தன்னைத்தானே தேற்றிக் கொண்டது.

ஆனால் உண்மையில் அந்த 38 கட்சிகளின் நிலை மிகவும் பரிதாபத்துக்குறிய வகையில் இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றன. குறிப்பாக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், அதிமுக, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் எல்லாம் பா.ஜ.க கூட்டணியில் ஏற்கெனவே இருந்தவை. ஆனால், கூட்டணியில் இருக்கும் போதே அக்கட்சிகளை உடைத்த பா.ஜ.க, தங்களால் உருவாக்கப்பட்ட அணியின் டூப்ளிகேட் தலைவர்களை அந்தக் கட்சிகளுக்கு தலைவர்கள் ஆக்கியுள்ளது.

“டூப்ளிகேட் தலைவர்கள்.. MP, MLA-க்கள் இல்லாத கட்சிகள்” : மோடியின் NDA கூட்டணியின் லட்சணம் இதுதான்!

இந்தக் கட்சிகளைத் துவக்கியவர்களில், உண்மையான தலைவர்கள் பலர் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால், டூப்ளிகேட் தலைவர்களை காட்டி, அவர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக பா.ஜ.க கணக்குக் காட்டுவதாக விமர்சணங்கள் எழுந்துள்ளது.

இதில், தமிழ்நாட்டில் அதிமுக-வைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு மட்டுமே அழைப்பு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கைவிடப்பட்டுள்ளார். அதேபோல் பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியேறிய பாமகக்கு அழைப்பு விடுத்துள்ளது பா.ஜ.க.

ஆனால் தங்களோடு தொங்கிக் கொண்டுள்ள தேமுதிக-வை கைவிட்டுள்ளது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் தனித்தே வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு பெற்றிருந்த புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதே ஒட்டப் பிடாராம் தொகுதியில் டெபாசிட்டை பறிகொடுத்தார். அவருக்கும் அழைப்புக் கொடுத்துள்ளது பா.ஜ.க. அவரேபோல ஜி.கே. வாசன் தலைமையிலான தமாகா ஆகிய கட்சிக்கும் அழைப்பு அனுப்பி, முக்கியமான கட்சிகள் என்று கணக்குக் காட்டியுள்ளது.

அதேபோல் இந்திய அளவில், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியில், துண்டாடப்பட்ட 2 பிரிவுகளுக்கும் அழைப்பு அனுப்பியுள்ளது பா.ஜ.க. பஞ்சாப்பில் அகாலிதளத்தின் ஒரு கோஷ்டி, மகாராஷ்டிராவில் யாருக்குமே தெரியாத பி.ஜே.பி(PJP), ஆர்.எஸ்.பி (RSP), ஜே.எஸ்.எஸ் (JSS), மணிப்பூரின் குக்கி மக்கள் முன்னணி, மேகாலயாவின் யு.டி.பி, எச்.பி.டி, உ.பி.யைச் சேர்ந்த நிஷாத் கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ், பீகார் அவாமி மோர்ச்சா, ஆந்திரா வில் பவண் கல்யாணின் ஜனசேனா, கேரளாவில் பாரத் தர்ம சேனா, கேரளா காமராஜ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் 38 கட்சிகள் கூட்டணி பட்டியலில் பா.ஜ.க காட்டியுள்ளது.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால், இந்த 38 கட்சிகளில் 24 கட்சிகளுக்கு மக்களவையில் ஒரு எம்.பி. கூட இல்லை. 9 கட்சிகளுக்கு மட்டும்தான் எம்.பி.க்கள் உள்ளனர். 27 கட்சிகளுக்கு மாநிலங்களவையிலும் ஒரு எம்.பி. கூட இல்லை. 7 கட்சிகளுக்கு எந்த ஒரு மாநிலத்திலும் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை. இது தான் பா.ஜ.க கூட்டியிருக்கும் 38 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கு ஆகும்.

banner

Related Stories

Related Stories