அரசியல்

பாஜகவால் இந்திய நாடு பிளவுபட்டுள்ளது: மோடியின் பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

பா.ஜ.கவால் இந்திய நாடு பிளவுபட்டுள்ளது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவால் இந்திய நாடு பிளவுபட்டுள்ளது: மோடியின் பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுக்கு ப.சிதம்பரம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நெறுங்கிவிட்டதால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்தே தீரவேண்டும் என்ற முனைப்பில் எதிர்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே அணையில் திரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர்கொள்ள தயாராகி விட்டது. அதற்கான முன்னோட்டமாகவும் பாட்னா கூட்டம் அமைந்துள்ளது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பு நடந்த கர்நாடகா, பஞ்சாம் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் நடைபெற உள்ள ஐந்து மாநில தேர்தலிலும் பா.ஜ.கவை தோற்கடிக்கக் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

பாஜகவால் இந்திய நாடு பிளவுபட்டுள்ளது: மோடியின் பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுக்கு ப.சிதம்பரம் கண்டனம்!

இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி "அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத்துக்கு வழிவகுக்கும் பொது சிவில் சட்டத்தை உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறது. ஆனால் வாக்கு அரசியல் நடத்துபவர்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்கிறார்கள். மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்" என்றார்.

இதையடுத்து பிரதமரின் இந்த பொது சிவில் சட்டம் குறித்த பேச்சுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரமும் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் ஒன்று வெளியிட்ட ப.சிதம்பரம், "பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை எளிமையான ஒன்றாகக் காட்சிப்படுத்துகிறார். ஆனால் அது சாத்தியமற்றது என்பதைச் சட்ட அணையத்தின் அறிக்கையைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

பா.ஜ.கவின் சொல்லாலும் செயலாலும் இன்று இந்திய நாடு பிளவுபட்டுள்ளது. மக்கள் மீது திணிக்கப்படும் இந்த பொது சிவில் சட்டத்தால் மேலும் மேலும் பிளவு ஏற்படும். பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசுவது பணவீக்கம், வேலையின்மை, மாநிலங்களின் உரிமைகள் பறிப்பது போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பும் செயல்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories