அரசியல்

கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து ம.பி-யிலும் அதிரடி காட்டும் காங்கிரஸ்.. வெளியான 5 வாக்குறுதிகள் !

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கர்நாடக பாணியை பின்பற்றி காங்கிரஸ் அதிரடி வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து ம.பி-யிலும் அதிரடி காட்டும் காங்கிரஸ்.. வெளியான 5 வாக்குறுதிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் இதில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர். சில இடங்களில் டெபாசிட்டையும் இழந்தனர்.

கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து ம.பி-யிலும் அதிரடி காட்டும் காங்கிரஸ்.. வெளியான 5 வாக்குறுதிகள் !

காங்கிரஸ் கட்சியின் வெற்றியை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குறுதிகளில் கூறிய படி, மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் போன்ற முதல் முக்கிய 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக மாநிலத்தின் புதிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதனிடையே பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்ற நிலையில், பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்தது. இதன் காரணமாக இந்த தேர்தலில் கட்டாயம் பெரும் வெற்றிபெற வேண்டும் என கர்நாடக பாணியை பின்பற்றி காங்கிரஸ் அதிரடி வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

கர்நாடக வெற்றியைத் தொடர்ந்து ம.பி-யிலும் அதிரடி காட்டும் காங்கிரஸ்.. வெளியான 5 வாக்குறுதிகள் !

அதன்படி சிலிண்டர் விலை ரூ.500 ஆக குறைக்கப்படும், பெண்கள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூ.1,500 வழங்கப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், விவசாயக் கடன் தள்ளுபடிசெய்யப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் ஆகிய வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாங்கள் கொடுத்த வாக்குறுதியை கர்நாடகாவில் நிறைவேற்றினோம்; அதை மத்தியப் பிரதேசத்திலும் நிறைவேற்றுவோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories