அரசியல்

“இனி பாஜகவுக்கு அந்த தைரியம் இருக்காது” - ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியது என்ன ?

கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இனி ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் பா.ஜ.க-வுக்கு இருக்காது என ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

“இனி பாஜகவுக்கு அந்த தைரியம் இருக்காது” - ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு இந்த தேர்தலில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.

“இனி பாஜகவுக்கு அந்த தைரியம் இருக்காது” - ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியது என்ன ?

பாஜகவின் இந்த தோல்வி அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தேர்தல் வெற்றி அடுத்தடுத்து நடக்கும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களிலும் எதிரொளிக்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இனி ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் பா.ஜ.க-வுக்கு இருக்காது என ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள தேசிய மாநாடு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா ”பாஜக தங்கள் வழக்கத்தின்படி தேர்தல் சூழ்நிலையை வகுப்புவாதமாக்க முடிந்தவரை முயன்றது. அதற்காக பஜ்ரங் பலி, இந்து-முஸ்லிம், இந்து மதம் ஆகியவற்றைக்கூட பிரசாரத்தில் பயன்படுத்தினர். ஆனாலும் மக்கள் இந்த வெறுப்புப் பிரசாரத்தைக் கண்டுகொள்ளாமல், காங்கிரஸ் மூலம் பாஜகவை ஓரங்கட்டியுள்ளனர்.

“இனி பாஜகவுக்கு அந்த தைரியம் இருக்காது” - ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியது என்ன ?

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்திய மக்கள் நாடு முழுவதுமுள்ள மக்களும் வகுப்புவாத அரசியலை நிராகரித்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தத் தேர்தலின் ஏற்பட்ட தோல்வி காரணமாக இனி ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் பாஜகவுக்கு இருக்காது” என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories