அரசியல்

90 % இடங்களில் படுதோல்வி.. அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் படுகுழிக்கு சென்ற கர்நாடக பாஜக !

அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்திருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

90 % இடங்களில் படுதோல்வி.. அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் படுகுழிக்கு சென்ற கர்நாடக பாஜக !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதிஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி (நேற்று) இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக 135 தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த வெற்றி வரும் நாடாளுமன்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மோடி பல முறை கர்நாடகா வந்து பிரச்சாரம் செய்தும் பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு இந்த தேர்தலில் முக்கியமாக பாஜகவை சேர்ந்த 14 அமைச்சர்கள் தங்கள் தொகுதியில் பெரும் தோல்வியை தழுவினர்.

90 % இடங்களில் படுதோல்வி.. அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் படுகுழிக்கு சென்ற கர்நாடக பாஜக !

இந்த தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக பாஜக தேர்தல் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு அவருக்கு சிவமோகா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகள், மைசூர் மற்றம் அதை சுற்றியுள்ள 60 தொகுதிகளின் பொறுப்பும் அவருக்கு ஒதுக்கப்பட்டது.

அங்கு வேட்பாளர் தேர்வின் போதே அண்ணாமலை கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாஜக படுதோல்வியை சந்தித்திருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளின் படி ஷிமோகா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மைசூர் மற்றும் அதை சுற்றியுள்ள 60 தொகுதிகளில் 53 தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றுள்ளதோடு அங்கு பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது.

90 % இடங்களில் படுதோல்வி.. அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் படுகுழிக்கு சென்ற கர்நாடக பாஜக !

அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 90% இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த தோல்விக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அண்ணாமலையே காரணம் என கர்நாடக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் அண்ணாமலை தலைமையில் பாஜக தொடர்ந்து தோல்வியைத் தழுவி வரும் நிலையில், தற்போது அவரின் பொறுப்பில் இருந்த கர்நாடக பகுதியிலும் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories