அரசியல்

‘எச்சி தொட்டு வாட்ச் சீரியல் நம்பரை அழித்த அண்ணாமலை’: பொழப்புக்காக என்னெல்லாம் பண்ணுறாரு பாஜகவினர் வேதனை!

ரஃபேல் வாட்ச் தொடர்பான அண்ணாமலையின் புதிய விளக்கத்தை இணையவாசிகள் கிண்டல் செய்து வரும் நிலையில் பாஜகவினரே அண்ணாமலையில் இந்த விளக்கத்தால் பீதி அடைந்துள்ளனர்.

‘எச்சி தொட்டு வாட்ச் சீரியல் நம்பரை அழித்த அண்ணாமலை’: பொழப்புக்காக என்னெல்லாம் பண்ணுறாரு பாஜகவினர் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் குறித்து இணையத்தில் சர்ச்சைக்குரிய வகையில் செய்திகள் பரவியது. எனவே இதற்கு அண்ணாமலை விளக்கம் அளித்து பேட்டி அளித்திருந்தார். அப்போது அந்த வாட்ச் ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டவை என்றும், தான் ஒரு தேசியவாதி என்பதால் அந்த வாட்ச்சை வாங்கியதாகவும் கூறினார்.

மேலும் இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்துபோது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்ச்சுகள் தயாரிக்கப்பட்டது என்றும், இது சிறப்புப் பதிப்பு என்பதால் ரபேல் விமானத்தில் உள்ள சில பாகங்கள் இந்த வாட்ச்சில் உள்ளது என்றும் கூறினார். அதோடு அந்த 500 வாட்சுகளில் தான் வைத்திருப்பது 149-ஆவது பதிப்பு என்றும் கூறினார்.

‘எச்சி தொட்டு வாட்ச் சீரியல் நம்பரை அழித்த அண்ணாமலை’: பொழப்புக்காக என்னெல்லாம் பண்ணுறாரு பாஜகவினர் வேதனை!

இவரது இந்த விளக்கத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி 4 ஆட்டுக்குட்டிகள் மட்டுமே தன்னிடம் இருக்கும் சொத்து என்று கூறும் அண்ணாமலைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? என்று கேள்வியெழுப்பினார். அதோடு ரபேல் வாட்சுக்கான பில் கேட்டு இணையத்தில் அண்ணாமலைக்கு எதிராக ட்ரெண்ட் ஆனது.

அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பாஜக தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம், எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்" என்று குறிப்பிட்டார்.

‘எச்சி தொட்டு வாட்ச் சீரியல் நம்பரை அழித்த அண்ணாமலை’: பொழப்புக்காக என்னெல்லாம் பண்ணுறாரு பாஜகவினர் வேதனை!

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏப்ரல் 1-ம் தேதி இதனை வெளியிடுவதாக அண்ணாமலை தெரிவித்தார். இதனால் மார்ச் 31-ம் தேதியே "நாளை ஏப்ரல் 1.. பில் எங்கே அண்ணாமலை.." என்று இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இதனால் தான் ஏப்ரல் 14-ம் தேதி ரபேல் வாட்சுக்கான பில்லை வெளியிடுவதாக பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த சூழலில் கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ரபேல் வாட்சுக்கான பில் என்று சொல்லி சீட்டை காண்பித்து அதற்கான விளக்கத்தையும் அண்ணாமலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், "ரபேல் வாட்ச் என்பது bell and ross உடன் சேர்ந்த டஸால்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. உலகத்திலேயே மொத்தமாக 500 வாட்ச்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் என்னிடம் இருக்கும் வாட்ச் 147-வது ஆகும்.

‘எச்சி தொட்டு வாட்ச் சீரியல் நம்பரை அழித்த அண்ணாமலை’: பொழப்புக்காக என்னெல்லாம் பண்ணுறாரு பாஜகவினர் வேதனை!

இந்த வாட்சை நீங்கள் சாதரணமாக கட்ட முடியாது. ஏனென்றால் இது செங்கல் போல் மிகவும் வெயிட்டாக இருக்கும். இந்த வாட்ச் இந்தியாவில் 2 பேர் தான் வாங்கியுள்ளார்கள். அதில் ஒருவர் மும்பையில் இருக்கிறார். இதன் 2-வது வாட்ச் கோயம்பத்தூரில் உள்ள Zimson Time Private Limited-ல் விற்கப்பட்டுள்ளது. இந்த வாட்சை மார்ச் மாதம் 2021-ல் கோவையை சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் வாங்கினார். எனக்கு இதுபோல் வாட்ச் இருப்பது பின்னர் தான் தெரியவந்தது. எனவே உடனே சேரலாதன் ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு அவரிடம் இருந்து நான் மே 27, 2021-ம் ஆண்டு பெற்றுக்கொண்டேன்" என்று கூறினார்.

இவரது இந்த இந்த விளக்கம் சரியான மழுப்பலாகவே இருக்கிறது. ஏனெனில் முதலில் அவர் காண்பித்தது பில் இல்லை, அது ஒரு சீட்டு. சீட்டு யார் வேண்டுமானாலும், எந்த தேதியில் வேண்டுமானாலும், யார் பெயரில் வேண்டுமானலும் தயாரித்து pirnt out எடுத்து காண்பிக்கலாம். எல்லாவற்றிக்கும் மேலாக ரபேல் வாட்ச் சர்ச்சை தொடங்கியபோது, அண்ணாமலை அளித்த விளக்கத்தில் "மொத்தம் 500 வாட்சுகளில் நான் வைத்திருக்கும் இந்த வாட்சின் எடிஷன் (பதிப்பு) 149-வது ஆகும்" என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது இவர் வைத்திருக்கும் வாட்ச் 147-வது எடிஷன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் கூறுவது அப்பட்டமான பொய் என்றும், மழுப்பல் என்றும் தெரிகிறது.

‘எச்சி தொட்டு வாட்ச் சீரியல் நம்பரை அழித்த அண்ணாமலை’: பொழப்புக்காக என்னெல்லாம் பண்ணுறாரு பாஜகவினர் வேதனை!

இதையடுத்து இதுகுறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது செய்தியாளர் சந்திப்பில் இவர் வேறு விதமான மழுப்பலை பதிலாக அளித்துள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது செய்தியாளர் இதுகுறித்து கேட்டபோது கையில் இருக்கும் வாட்சை கழட்டி அதனை எச்சிலால் தேய்த்து “என்னுடைய கையில் இருக்கும் அழுக்கு எல்லாம் வாட்ச்சில் சேர்ந்ததால், மேடையில் அதனை படிக்கும் போது கடினமாக இருந்தது; பில்லில் இருக்கும் 147 தான் என்னுடைய வாட்சின் சீரியல் நம்பர்!” என்று கூறியுள்ளார். அவரின் இந்த விளக்கத்தை இணையவாசிகள் கிண்டல் செய்து வரும் நிலையில் பாஜகவினரே அண்ணாமலையில் இந்த விளக்கத்தால் பீதி அடைந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories