அரசியல்

“ஓட்டாண்டி ஆன பிறகு ஒப்புதல் அளித்த RN ரவி” - ஆளுநரை காட்டமாக விமர்சித்த CPI(M) செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

இப்போதும் கூட ஆளுநர் சார்ந்துள்ள சங் பரிவார் இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று குழப்பத்தை விளைவிக்கலாமா என்று முயற்சிக்கக் கூடும் என சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

“ஓட்டாண்டி ஆன பிறகு ஒப்புதல் அளித்த RN ரவி” - ஆளுநரை காட்டமாக விமர்சித்த CPI(M) செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளினால் பலரும் பணத்தை இழந்து தற்கொலை செய்து வருகின்றனர். இது தற்கொலை மட்டுமல்லாமல் கொலையிலும் முடிகிறது. இந்த சூதாட்டத்தால் பல உயிர்கள் பலி போயுள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி, அதனை நிரந்தர சட்டமாக மாற்ற ஆளுநரின் ஒப்புதலை பெற கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனுப்பி வைக்கப்பட்டது.

“ஓட்டாண்டி ஆன பிறகு ஒப்புதல் அளித்த RN ரவி” - ஆளுநரை காட்டமாக விமர்சித்த CPI(M) செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

ஆனால் அதற்கு தாமதம் படுத்தி ஒப்புதல் அளிக்காமல் அந்த மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் கடந்த மார்ச் மாதம் கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது மீண்டும் இதற்கு தடை விதிக்க மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

“ஓட்டாண்டி ஆன பிறகு ஒப்புதல் அளித்த RN ரவி” - ஆளுநரை காட்டமாக விமர்சித்த CPI(M) செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த 23-ம் தேதி அனுப்பட்ட மசோதாவுக்கு நேற்று வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த சூழலில் ஆளுநரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் எதிராக இன்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

“ஓட்டாண்டி ஆன பிறகு ஒப்புதல் அளித்த RN ரவி” - ஆளுநரை காட்டமாக விமர்சித்த CPI(M) செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு இயற்றிய சட்ட மசோதாவான ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

“ஓட்டாண்டி ஆன பிறகு ஒப்புதல் அளித்த RN ரவி” - ஆளுநரை காட்டமாக விமர்சித்த CPI(M) செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

இந்த நிலையில் இதுவரையிலும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அவரை தடுத்தது எது என்று தமிழ்நாடு சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிக்கை வாயிலாக கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து 'அடிபணிந்தார் ஆளுநர்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு நீண்ட கால தாமதத்திற்கு பிறகு ஒப்புதல் அளித்துள்ளார். இதுவரையிலும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் அவரை தடுத்தது எது என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்.

“ஓட்டாண்டி ஆன பிறகு ஒப்புதல் அளித்த RN ரவி” - ஆளுநரை காட்டமாக விமர்சித்த CPI(M) செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

சட்டமன்றத்தை அவமதித்து தமிழக மக்களின் உணர்வுகளை காலில்போட்டு மிதித்து பல்வேறு உயிர்கள் பலியான பிறகு, பல குடும்பங்கள் ஓட்டாண்டி ஆன பிறகு வேறு வழியில்லாமல் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்புதல் அவரின் மனம் உவந்த ஒப்புதல் அல்ல. போராட்டங்கள் மற்றும் சட்டத்தின்படி வேறு வழியில்லாத நிலை ஆகிய காரணங்களால் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

“ஓட்டாண்டி ஆன பிறகு ஒப்புதல் அளித்த RN ரவி” - ஆளுநரை காட்டமாக விமர்சித்த CPI(M) செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

இப்போதும் கூட அவர் சார்ந்துள்ள சங் பரிவார் இதை நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று குழப்பத்தை விளைவிக்கலாமா என்று முயற்சிக்கக் கூடும். தமிழக மக்கள் அதையும் முறியடிப்பார்கள். ஆளுநர் ரவியை பகடை காயாக்கி தமிழக மக்களின் நலன்களை பணயப் பொருளாக்கி ஒன்றிய அரசும், பாஜகவும் விளையாடும் விளையாட்டு இது என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள். இனியேனும் தன்னிடம் நிலுவையில் உள்ள மசோதாக்களை அவருக்கு இருக்கும் கடமைகளின்படி ஒப்புதல் அளிக்க ஆளுநர் முன்வர வேண்டும்.

இந்த மசோதா சட்ட வடிவம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசு, போராடிய கட்சிகள், இயக்கங்கள், தமிழ்நாட்டு மக்கள், ஊடகங்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories