அரசியல்

ஹத்ராஸ் குற்றவாளிகள் விடுதலை.. பெண்ணின் வாக்குமூலம் இருந்தும் குற்றவாளிகளை தப்பிக்கவைத்த பாஜக அரசு !

ஹத்ராஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தில் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியான நிலையிலும் நீதிமன்றம் முரண்பாடான தீர்ப்பை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ் குற்றவாளிகள் விடுதலை.. பெண்ணின் வாக்குமூலம் இருந்தும் குற்றவாளிகளை தப்பிக்கவைத்த பாஜக அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த 19 வயது பட்டியலினப் பெண் வேறு சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று கடுமையாகத் தாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். மேலும் அந்த 4 பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணின் நாக்கை வெட்டியுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சாலையோரத்தில் மீட்கப்பட்ட அந்தப் பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.இதனையடுத்து அந்தப் பெண்ணின் உடல் டெல்லியில் இருந்து அவருடைய கிராமத்துக்கு நள்ளிரவில் கொண்டு செல்லப்பட்டதோடு, பெற்றோரின் அனுமதியில்லாமல் உத்தர பிரதேச மாநில போலிஸாரே தகனம் செய்தனர்.

ஹத்ராஸ் குற்றவாளிகள் விடுதலை.. பெண்ணின் வாக்குமூலம் இருந்தும் குற்றவாளிகளை தப்பிக்கவைத்த பாஜக அரசு !

இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு பல்வேறு தரப்பினரால் பெரும் போராட்டங்களும் வெடித்தன. இந்த வழக்கில் கைதான 4 பேரில் 3 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து கைதான 4 பேர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டையும் நிராகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்ட பெண் உயிரோடிருக்கும்போது பேசிய மூன்று வீடியோக்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. அதில் இரண்டு வீடியோக்களை பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ட்விட்டரில் வெளியிட்டிருந்தாலும், ஹத்ராஸ் பெண்ணின் வாக்குமூலமும் வீடியோ உரையாடலும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்பதை உணர்த்துகின்றன . அந்த வீடீயோக்கள் பாஜக ஆதரவாளர்களால் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது என்பதும் தெரியவருகிறது.

ஹத்ராஸ் குற்றவாளிகள் விடுதலை.. பெண்ணின் வாக்குமூலம் இருந்தும் குற்றவாளிகளை தப்பிக்கவைத்த பாஜக அரசு !

பாஜக ஆதரவாளர் வெளியிட்ட முதல் வீடியோவில், 'அந்தப் பெண்ணிடம் யார் உன்னுடைய கழுத்தை நெறித்தார்கள்' எனக் கேட்க அந்த பெண் வலியுடன் துடித்துக்கொண்டே, 'அவன் என்னை கட்டாயப்படுத்தினான், அவனை தடுத்தேன்' என்று கூறியுள்ளார். பின்னர் ‘அவன் ஏன் உன் கழுத்தை நெறித்தான்?’ எனக் கேட்க அதற்கு ‘அவன் என்மீது அழுத்திய போது, நான் தடுத்ததால்’ எனக் கூறியுள்ளார்.

மேலும், இரண்டாவது வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ‘சந்தீப் இதைச் செய்தான்’ என சொல்கிறார். ஏன் இதைச் செய்தான் எனக் கேட்கும்போது, 'நாங்கள் புல் சேகரிக்கப்போயிருந்தோம்…அப்போது அவன் என்னை அங்கு இழுத்துக்கொண்டு சென்றான். அவன் என்னிடம் கட்டாயப்படுத்தினான். நான் மறுத்தேன். அதனால் என் கழுத்தை நெறித்தான்’ என்று கூறியுள்ளார். மூன்றாவது வீடியோவில் ‘அவர்கள் மேலும் ஒரு முறை உன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்களா?’ எனக் கேட்க அதற்கு ‘ஆமாம்… அந்த சகோதரர்கள்’ என்கிறார். அதோடு அந்த வீடியோ முடிகிறது.இதன் மூலம் அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியான நிலையிலும் நீதிமன்றம் முரண்பாடான தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஹத்ராஸ் குற்றவாளிகள் விடுதலை.. பெண்ணின் வாக்குமூலம் இருந்தும் குற்றவாளிகளை தப்பிக்கவைத்த பாஜக அரசு !

இது தவிர தடயவியல் பரிசோதனை குற்றம் நடந்த எட்டு நாட்களுக்குப் பிறகே நடத்தப்பட்டுள்ளது, அந்த நேரத்தில் ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியங்கள் பூஜ்ஜியமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதோடு விந்தணு ஆதாரங்களை பாலியல் வன்முறைக்கு பிறகான ஒன்றிரண்டு நாட்களில் மட்டுமே பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த வழக்கில் காவல்துறை பாஜக அரசு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் என்பது வெளிப்படையாக தெரியவருகிறது.

banner

Related Stories

Related Stories