அரசியல்

‘வந்தேறிகள்..’ வார்த்தையை விட்ட சீமான்.. பாய்ந்த வன்கொடுமை தடுப்பு சட்டம்.. போலிசார் அதிரடி !

குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

‘வந்தேறிகள்..’ வார்த்தையை விட்ட சீமான்.. பாய்ந்த வன்கொடுமை தடுப்பு சட்டம்.. போலிசார் அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுகிறது. தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

‘வந்தேறிகள்..’ வார்த்தையை விட்ட சீமான்.. பாய்ந்த வன்கொடுமை தடுப்பு சட்டம்.. போலிசார் அதிரடி !

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியின் நிலை இப்படி இருக்க அதிமுக கூட்டணியில் போட்டியிடப்போவது யார் என்பதில் தொடங்கி வேட்பாளர் யார் என்பது வரை பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவியது. ஒருவழியாக இறுதியில் அதிமுக தரப்பு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘வந்தேறிகள்..’ வார்த்தையை விட்ட சீமான்.. பாய்ந்த வன்கொடுமை தடுப்பு சட்டம்.. போலிசார் அதிரடி !

இதனிடையே வழக்கம்போல நாம் தமிழர் கட்சியும் இந்த தேர்தலில் மேனகா நவநீதன் என்ற பெண் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரச்சாரத்தின் போது அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் சமூகத்தினரை குறித்து அவதூறாக குறிப்பிட்டு பேசியதும், குறிப்பிட்ட சமூகத்தினரை 'வந்தேறிகள்' என்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

‘வந்தேறிகள்..’ வார்த்தையை விட்ட சீமான்.. பாய்ந்த வன்கொடுமை தடுப்பு சட்டம்.. போலிசார் அதிரடி !

இதன் காரணமாக அந்த தொகுதியின் பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சியினரை தொகுதி மக்கள் விரட்டி வருகின்றனர். மேலும், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சீமானின் உருவபொம்மை எரிக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘வந்தேறிகள்..’ வார்த்தையை விட்ட சீமான்.. பாய்ந்த வன்கொடுமை தடுப்பு சட்டம்.. போலிசார் அதிரடி !

அதோடு கடந்த 20-ம் தேதி ஆலமரத்தெரு பகுதியில் அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதால், வேட்பாளர் மேனகாவு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சர்ச்சை தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சீமான் இந்த பேச்சு குறித்து விளக்கமும் சொல்லவில்லை; மன்னிப்பும் கேட்கவில்லை.

‘வந்தேறிகள்..’ வார்த்தையை விட்ட சீமான்.. பாய்ந்த வன்கொடுமை தடுப்பு சட்டம்.. போலிசார் அதிரடி !

இந்த நிலையில், தற்போது சீமான் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, அருந்ததியர் சமூகம் பற்றிய அவதூறு கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கருங்கல்பாளையம் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories