அரசியல்

“மக்கள் பெயில் ஆக்கினாலும் மோடி பாஸ் போட்டு ஆளுநராவோம் என்பதே இறுமாப்புதான்..” -தமிழிசைக்கு சு.வெ பதிலடி!

மக்கள் பெயில் ஆக்கினாலும் மோடி பாஸ் போட்டு ஆளுநராவோம் என்பதே இறுமாப்புதான் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுக்கு மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

“மக்கள் பெயில் ஆக்கினாலும் மோடி பாஸ் போட்டு ஆளுநராவோம் என்பதே இறுமாப்புதான்..” -தமிழிசைக்கு சு.வெ பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

"ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?" என்று அறிஞர் அண்ணா அன்று கேட்டது தற்போது வரை பொருந்திப் போகிற ஒன்றாகவே இருக்கிறது. குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங்களுக்கு தேர்ந்தெடுத்து ஆளுநர்களை அனுப்பி அங்கிருக்கும் மாநில அரசுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது ஒன்றிய அரசு.

தமிழ்நாட்டில் பன்வாரிலால் புரோஹித் இருந்தபோதும் சரி, தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கும்போதும் சரி.. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களை செயல்படுத்த விடாமல் குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் நீண்ட நாட்கள் இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து ஆளுநராக நியமித்து வருகிறது ஒன்றிய அரசு.

“மக்கள் பெயில் ஆக்கினாலும் மோடி பாஸ் போட்டு ஆளுநராவோம் என்பதே இறுமாப்புதான்..” -தமிழிசைக்கு சு.வெ பதிலடி!

அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து புதுச்சேரிக்கும் துணைநிலை ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார்.

இவர் புதுச்சேரிக்கு துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே அங்கும் மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். அதோடு அண்மையில் கூட புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தங்கள் மாநிலத்துக்கு தேவையான நல்ல விஷயங்களை ஒன்றிய அரசு செய்யவிடுவதில்லை என்று பகிரங்க குற்றசாட்டை முன்வைத்தர். புதுச்சேரியில் பாஜகவும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கூட்டணியில் உள்ள நிலையிலும் இந்த கொடுமை நடந்து வருகிறது.

“மக்கள் பெயில் ஆக்கினாலும் மோடி பாஸ் போட்டு ஆளுநராவோம் என்பதே இறுமாப்புதான்..” -தமிழிசைக்கு சு.வெ பதிலடி!

இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதாவது அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், "எங்களை தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்தாலும், பிரதமர் மோடி எங்கள் திறமைகளை பார்த்து ஆளுநராக நியமிக்கிறார்" என்று பேசியிருந்தார்.

“மக்கள் பெயில் ஆக்கினாலும் மோடி பாஸ் போட்டு ஆளுநராவோம் என்பதே இறுமாப்புதான்..” -தமிழிசைக்கு சு.வெ பதிலடி!

இவரது பேச்சை குறிப்பிட்ட மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் கேட்ட கேள்விக்கு முறையாக பதில் சொல்லாமல், தமிழிசை தனது ட்விட்டர் பக்கத்தில், "ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல.. அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்... தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது..

ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்... அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே.... நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்... நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்... இறுமாப்பு வேண்டாம்... ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்...

அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை." என்று எம்.பி., சு.வெங்கடேசன் கூறியதற்க்கு சம்மந்தம் இல்லாமல் ஏதோ குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஆளுநர் தமிழிசைக்கு பதிலடி கொடுக்கும்விதமாக எம்.பி., சு.வெ மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் இவருக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "நீங்கள் மக்களை கேவலப்படுத்தியதால் அந்த கேள்வி வந்தது தமிழிசை அவர்களே. நான் டுடோரியலை கேவலமாக சொல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு. அதுவே கேள்வி. கேள்வியை விட்டு விட்டு வேறு ஏதாவது பதில் பேசினால் கூட பரவாயில்லை. எந்த தரத்திற்கு இறங்கி பேசியிள்ளீர்கள்? இது தான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா தமிழிசை அவர்களே!" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories