அரசியல்

பழனிசாமி பெருசா ? அண்ணாமலை பெருசா ? -ஒரே கூட்டணியில் இருந்தும் அடித்துக்கொள்ளும் அதிமுக-பாஜக கட்சியினர் !

ஒரே கூட்டணியில் இருந்தும் அடித்துக்கொள்ளும் அதிமுக-பாஜக கட்சியினரின் செயலை இணையவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பழனிசாமி பெருசா ? அண்ணாமலை பெருசா ? -ஒரே கூட்டணியில் இருந்தும் அடித்துக்கொள்ளும் அதிமுக-பாஜக கட்சியினர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

பழனிசாமி பெருசா ? அண்ணாமலை பெருசா ? -ஒரே கூட்டணியில் இருந்தும் அடித்துக்கொள்ளும் அதிமுக-பாஜக கட்சியினர் !

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக கூட்டணியின் நிலை இப்படி இருக்க அதிமுக கூட்டணியில் போட்டியிடப்போவது யார் என்பதில் தொடங்கி வேட்பாளர் யார் என்பது வரை பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவியது. ஒருவழியாக இறுதியில் அதிமுக தரப்பு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழனிசாமி பெருசா ? அண்ணாமலை பெருசா ? -ஒரே கூட்டணியில் இருந்தும் அடித்துக்கொள்ளும் அதிமுக-பாஜக கட்சியினர் !

இந்த பிரச்சாரத்தில் பல இடங்களில் அதிமுகவினர் கூட்டணி கட்சியான பாஜக கொடியை பயன்படுத்தாமல் பிரச்சாரம் செய்வதாக கூட்டணியில் சலசலப்பு எழுந்தது. தமிழக பாஜக பூத் கமிட்டிகளுக்கே ஆள் கிடைக்காமல் தள்ளாடும் நிலையில், கூட்டணியில் அவர்களே பெரிய கட்சி என்று பேசிவருவதை அதிமுக தலைவர்கள் ரசிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த கூட்டணியில் நடைபெற்றுள்ள சம்பவத்தை நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர். பாஜக துணை தலைவர் செல்வ குமார் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்ற வாரம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈரோடு வந்த போது அவருடைய கூட்டத்திற்கு செல்ல கூடாது என ₹1000 கொடுத்து பட்டியில் அடைத்து வைத்தனர் திமுகவினர். நேற்று பாஜக தலைவர் அண்ணாமலையார் வரும்பொழுது ₹2000 கொடுத்தனர், அதையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்றனர்" என்று கூறியிருந்தார். இதன்மூலம் பழனிசாமியை விட அண்ணாமலையை பெரிய தலைவராக பொதுமக்கள் பார்ப்பதாக அவர் கூறியிருந்தார்.

பழனிசாமி பெருசா ? அண்ணாமலை பெருசா ? -ஒரே கூட்டணியில் இருந்தும் அடித்துக்கொள்ளும் அதிமுக-பாஜக கட்சியினர் !

ஆனால், அவரின் இந்த கருத்துக்கு ஈரோட்டை சேர்ந்த நரேஷ் என்றார் அதிமுக பிரமுகர் ஒருவர் உண்மை நிலையை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், "மன்னிக்கவும் உண்மை நிலவரம் சொல்ல வேண்டி இருக்கு நேற்று தமிழக பிஜேபி இருந்து 50 பேர் மட்டுமே வந்தனர் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எங்கள் அதிமுக பொறுப்பாளர்கள் அதிமுக தொண்டர்களை அனைத்து இடங்களில் இருந்து வர வைத்து கூட்டத்தை காட்டினர்..வடை சுட வேணாம் கோமாளி" எனக் கூறியுள்ளார். இதன்மூலம் அண்ணாமலையின் பிரச்சாரத்துக்கு பாஜகவினரே வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு இணையவாசிகள் பாஜகவை கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories