அரசியல்

மீண்டும் பெரியார் படம்.. நேரடியாக JNU-க்கே சென்ற திமுக MP: ABVP கும்பல் வன்முறைக்கு திமுக கொடுத்த பதிலடி!

ABVP கும்பலால் பெரியார் புகைப்படம் சேதப்படுத்தப்பட்ட நிலையில், தருமபுரி MP செந்தில் குமார் புதிய பெரியார் புகைப்படத்தை மாணவர்களிடம் கொடுத்துள்ளார்.

மீண்டும் பெரியார் படம்.. நேரடியாக JNU-க்கே சென்ற திமுக MP: ABVP கும்பல் வன்முறைக்கு திமுக கொடுத்த பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவின் அறிவுசார் கொடை மையமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் விளங்குகிறது. இப்பல்கலைக்கழகம்தான் நாட்டில் உள்ள தலைசிறந்த வல்லுநர்கள் உருவாக்கியது. கல்வி மட்டுமல்லாது சமூக அக்கறையிலும் இப்பல்கலைக்கழகம் சிறந்த பங்களிப்பை செய்திருக்கிறது.

குறிப்பாக பல்கலைக்கழகங்களில் நிகழும் கல்விக் கட்டணக் கொள்கைக்கு எதிராகவும், அரசின் தவறான கொள்கை முடிவுக்கு எதிராகவும் போராடி வெற்றிக் கண்ட வரலாறு இப்பல்கலைக்கழகத்திற்கு உண்டு. மேலும் ஜே.என்.யூ-வில் பலதரப்பட்ட அரசியல் சிந்தாந்த மாணவர்கள் ஒன்றாக பயின்று, தங்களின் சித்தாந்தத்தை அறிவுசார் தளமாக உருவாக்கி அரசியல் தீர்வுகளை முன்வைக்கும் பழக்கம் இப்பல்கலைக்கழக மாணவர்களிடத்தில் உண்டு.

மீண்டும் பெரியார் படம்.. நேரடியாக JNU-க்கே சென்ற திமுக MP: ABVP கும்பல் வன்முறைக்கு திமுக கொடுத்த பதிலடி!

அந்தவகையில் முற்போக்கு இடதுசாரி, பெரியாரி - அப்பேத்கர் போன்ற அரசியல் சித்தாந்தத்தோடு இயங்கும் மாணவர்களுக்கு தனித்தனியே அமைப்புகளுக்கும் உண்டு. அந்த அமைப்புகளின் சார்பில் அவ்வபோது கருத்தரங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டும்.

அதேவேளையில், அறிவுசார் தளத்தில் மோதி வெல்வதற்கு பதிலாக பா.ஜ.கவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி தொடர்ந்து சாதி - மத ரீதியான கருத்துகளை முன்வைத்து மாணவர்கள் மத்தியில் மோதல்போக்கை உண்டாக்கும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மீண்டும் பெரியார் படம்.. நேரடியாக JNU-க்கே சென்ற திமுக MP: ABVP கும்பல் வன்முறைக்கு திமுக கொடுத்த பதிலடி!

கடந்த காலங்களில் மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடிய இடதுசாரி மாணவர் அமைப்பின் மீது, ஏ.பி.வி.பி-யினர் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, கடும் கண்டனங்களுக்குள் உள்ளானது.

இப்பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறையை தூண்டும் ஏ.பி.வி.பி அமைப்பினருக்கு பா.ஜ.க அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது. இந்நிலையில், நேற்றைய தினம் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏ.பி.வி.பி-யினர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜே.என்.யூ-வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் “ரிசர்வேசன் கிளப்’’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பாக கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தி நடத்தியுள்ளனர். அப்போது கூட்டம் முடிந்த பின்னர், அரங்கிற்கு வந்த ஏ.பி.வி.பி அமைப்பினர் பெரியார் படத்தையும் அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

மீண்டும் பெரியார் படம்.. நேரடியாக JNU-க்கே சென்ற திமுக MP: ABVP கும்பல் வன்முறைக்கு திமுக கொடுத்த பதிலடி!

இதனைத் தடுக்கச் சென்ற மாணவர்கள் மீது 15க்கும் மேற்பட்டோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாசர் என்ற மாணவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்தில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ABCP அமைப்பினர் பெரியார் சிலையை சேதப்படுத்திய நிலையில் தருமபுரி MP செந்தில் குமார் புதிய பெரியார் புகைப்படத்தை மாணவர்களிடம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை JNU பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் காயமடைந்த மாணவர் ஆகியோர் பெற்றுக் பெற்றுக்கொண்டனர். அந்த புகைப்படம் JNU பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அறையில் மீண்டும் மாட்டப்பட்டது. மாணவர்கள் பலர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

banner

Related Stories

Related Stories