அரசியல்

என்னை தடுமாற வைத்த அம்மையார்.. உதவிய கலைஞர்-ஸ்டாலின்.. : தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உருக்கம் !

என்னை தடுமாற வைத்த அம்மையார்.. உதவிய கலைஞர்-ஸ்டாலின்.. : தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து போட்டியிடுகிறது. தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

என்னை தடுமாற வைத்த அம்மையார்.. உதவிய கலைஞர்-ஸ்டாலின்.. : தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உருக்கம் !

காங்கிரஸுக்கு ஆதரவாக அதன் கூட்டணி கட்சிகள், மேலும் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஆதரவு தெரிவித்துள்ளது. தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்னை தடுமாற வைத்த அம்மையார்.. உதவிய கலைஞர்-ஸ்டாலின்.. : தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உருக்கம் !

இந்த நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மக்களிடம் அவர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ஆபத்து காலத்தில் சின்னம், கட்சியை தாண்டியது தேசம் என்பதால்தான் இந்த பரப்புரைக்கு வந்தேன்.

ஜனநாயகம் வழியாகவும் சர்வாதிகாரம் வந்தடைந்தற்கு பல சான்றுகள் இருக்கிறது. இன்று இந்தியாவிலும் அது நடந்து கொண்டு இருக்கிறது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் எனக்கும் உறவு இருக்கிறது. அவரும் பெரியார் பேரன். நானும் பெரியாரின் பேரன். பெரியார் காந்தியாரின் தம்பி. இன்று விட்டு போன கடமையை செய்ய வந்திருக்கிறேன்.” என்றார்.

என்னை தடுமாற வைத்த அம்மையார்.. உதவிய கலைஞர்-ஸ்டாலின்.. : தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உருக்கம் !

மேலும் தொடர்ந்து உரையாற்றிய அவர், "எனது படமான விஸ்ரூபம் வெளியாகி சிக்கலில் இருந்தபோது என்னை தடுமாற வைத்து வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார். கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா? என கேட்டார். இது தேச பிரச்சினை அல்ல. நான் பார்த்துகொள்கின்றேன் என்றேன். இப்போது முதலமைச்சராக உள்ள மு.க.ஸ்டாலினும், என்ன உதவி வேண்டுமானாலும் நாங்கள் இருக்கிறோம் என்றார்.

என்னை தடுமாற வைத்த அம்மையார்.. உதவிய கலைஞர்-ஸ்டாலின்.. : தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் உருக்கம் !

இப்போது தேசத்திற்காக கூட்டணி வைத்துள்ளேன். மாற்றத்தை கொண்டு வரும் திறன் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை சரியான நேரத்தில் நினைவூட்டுகிறேன்.நான் அரசியலுக்கு வந்தது லாபத்துக்காகவோ, ஆதாயத்துக்காகவோ அல்ல; நல்லது நடக்க வேண்டும் என அறம் நோக்கி கூட்டணிக்காக வந்துள்ளேன். என் பயணத்தை பாருங்கள். எனது பாதை புரியும். கொள்கையை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக வரும்போது எல்லாம் நியாயம்” என்றார்.

banner

Related Stories

Related Stories