அரசியல்

ஜெயலலிதா, சசிகலாவுக்கு மீசை இருந்ததால்தான் காலில் விழுந்தீங்களா எடப்பாடி?-‘சுறுக்’ பதிலடி கொடுத்த கனிமொழி

பல ஆண்டுகளாக ஒரு அம்மையாரின் காலில் விழுந்து எழுந்திருக்கிறார் பழனிசாமி, அவர்கள் என்ன மீசை வைத்திருந்தார்களா என கனிமொழி MP எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு மீசை இருந்ததால்தான் காலில் விழுந்தீங்களா எடப்பாடி?-‘சுறுக்’ பதிலடி கொடுத்த கனிமொழி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏவும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வே.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான திருமகன் ஈ.வெ.ரா, ஜனவரி 3-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அத்தொகுதி காலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதேதொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு மீசை இருந்ததால்தான் காலில் விழுந்தீங்களா எடப்பாடி?-‘சுறுக்’ பதிலடி கொடுத்த கனிமொழி

இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க கூட்டணியின் நிலை இப்படி இருக்க அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடப்போவது யார் என்பதில் தொடங்கி வேட்பாளர் யார் என்பது வரை பல்வேறு அரசியல் குழப்பங்கள் நிலவியது. ஒருவழியாக இறுதியில் அ.தி.மு.க தரப்பு வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வினரும் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு மீசை இருந்ததால்தான் காலில் விழுந்தீங்களா எடப்பாடி?-‘சுறுக்’ பதிலடி கொடுத்த கனிமொழி

அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோட்டில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி "நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா" என்ற ரீதியில் கொச்சையாக பேசியிருந்தார். அவரின் இந்த அருவருக்கத்தக்க பேச்சுக்கு திரைப்பட இயக்குமார் நவீன் உள்ளிட்டோர் தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில், ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி பழனிசாமிக்கு சரியான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், " பழனிசாமி வேஷ்டி கட்டுறியா, மீசை இருக்கா, ஆம்பளையா என்கிறார். ஆண்மையின் திமிர் அழிய வேண்டும் என்று சொன்ன பெரியாரின் மண்ணில் நின்று கொண்டு, ஆம்பளையா பொம்பளையா என்று கேட்கிறார். பல ஆண்டுகளாக ஒரு அம்மையாரின் காலில் விழுந்து எழுந்திருக்கிறார். அவர்கள் என்ன மீசை வைத்திருந்தார்களா அல்லது வேஷ்டி கட்டியிருந்தார்களா?

ஜெயலலிதா, சசிகலாவுக்கு மீசை இருந்ததால்தான் காலில் விழுந்தீங்களா எடப்பாடி?-‘சுறுக்’ பதிலடி கொடுத்த கனிமொழி

பதவி என்று சொன்னவுடன் ஒரு அம்மையாரின் காலில் விழுந்தார். பின்னர் அவர்களின் முதுகிலேயே குத்தினார். இதுதான் ஆண்மையா? இதுதான் மனிதமா? நீங்கள் வீரம், தைரியம் பற்றி பேசுகிறீர்கள். இன்று 50,000 கொடுத்தால் அறுவை சிகிச்சை மூலம் ஆண் பெண்ணாகலாம், பெண் ஆணாக மாறலாம். வேட்டி கட்டுவதும், மீசை வைத்திருப்பதும் ஆண்மை ஆகாது. தோல்வி பயத்தில் பிதற்றுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories