அரசியல்

“குரைப்போர் குரைக்கட்டும்.. பிஸ்கெட் வீச நமக்கு நேரமில்லை” : சிந்தனையில் சீழ் பிடித்த ஈனர்களுக்கு பதிலடி!

தமிழர்களின் தன்மானத்தைத் தலைநிமிரச் செய்த ஒரு பேனா வைக்கும் போது மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது என்றால், ஏதோ வீசும் எச்சில் இலைச் சோற்றுக்கு பெற்ற தாயை விற்கத் துணியும் ஈனர்கள் செயல் இது

“குரைப்போர் குரைக்கட்டும்.. பிஸ்கெட் வீச நமக்கு நேரமில்லை” : சிந்தனையில் சீழ் பிடித்த ஈனர்களுக்கு பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கோடிக்கணக்கில் செலவழித்து ஜெயலலிதா கொடநாட்டிற்கு ஹெலிகாப்டரில் போகும் போது வராத கோபம்..

அப்போலோ மருத்துவ மனையில் ஒரு கோடிக்கு இட்லி சாப்பிட்ட போது வராத கோபம்..

ஒரு முதலமைச்சரை 75 நாட்கள் மருத்துவமனையில் யாரையும் பார்க்க விடாமல் ரகசியமாய் கூத்தடித்து இட்லிக்கு, தேங்காய், சட்னி தொட்டுக் கொண்டார் என்றும், இல்லை இல்லை வெங்காய சட்னிதான் தொட்டுக் கொண்டார் என்றும் மக்களை இளிச்சவாயர் களாக்கிக் கேவலப்படுத்திய போது வராத கோபம்...

வளர்ப்பு மகனின் திருமணத்தை அரசு உயர் அதிகாரிகளை வேலைக்காரர்களாக்கி 100 கோடிக்கு மேல் செலவழித்து நடத்திய போது வராத கோபம்...

மக்களின் லட்சக்கணக்கான வரிப்பணத்தை 0 ஓட்டு வாங்கும் மாநிலக் கட்சித் தலைவருக்கு Z.பிரிவு பாதுகாப்பு என்ற பெயரில் வீணடிக்கும் போது வராத கோபம்.....

மூன்று முறை நீதிமன்றத்தால் “ஊழல் குற்றவாளி" என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதும், நாட்டை ஆண்ட கோமாளிகளால் அரசுப் பணத்தில் கோடிக்கணக்கில் செலவழித்து, நினைவு மண்டபம் கட்டிய போது வராத கோபம்....

"எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா" என்ற பெயரில் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் அரசுப்பணத்தை செலவு செய்து, தரையில் தவழ்ந்து சென்றே ஆட்சியைப் பிடித்த அடிமைகள் கொள்ளை அடித்த போது வராத கோபம்...

ரூ.8500 கோடியில் தனி விமானம் வாங்கி அதில் போகும் போது வராத கோபம்... 3000 கோடி ரூபாய் செலவில் படேல் சிலை வைத்தபோது வராத கோபம்....

ஆவணப் படங்கள் - கொடூர கொலைக் குற்றவாளிகள் என்று சொல்லும் போது வராத கோபம்.....

மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு வாரிவாரிக் கொடுக்கும் போது வராத கோபம்.....

தமிழர்களின் தன்மானத்தைத் தலைநிமிரச் செய்த ஒரு பேனா வைக்கும் போது மட்டும் பொத்துக் கொண்டு வருகிறது என்றால், ஏதோ வீசும் எச்சில் இலைச் சோற்றுக்கு பெற்ற தாயை விற்கத் துணியும் ஈனர்கள் செயல் இது என்றும், சிந்தனையில் சீழ் பிடித்த மனநோயாளிகளின் பிதற்றலே இது என்றும், வீசும் காசின் அளவுக்கேற்பக் குரைக்கும் பிராணியின் செயல் இது என்றும் பேனா கொண்டு எழுதத் தெரிந்தவர்களால் எண்ணத் தோன்றுகிறது.

குரைப்போர் குரைக்கட்டும். பிஸ்கெட் வீசிக்கொண்டிருப்பதற்கு நமக்கு நேரமில்லை. அறிவை விரிவு செய்வோம். "வாள் முனையை விட பேனா முனை வலியது”

- முரசொலி (07.02.2023)

banner

Related Stories

Related Stories