அரசியல்

"BC பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்" - நாடாளுமன்றத்தில் திமுக MP மசோதா தாக்கல்!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்க சட்டதிருத்தும் செய்யவேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக MP வில்சன் மசோதா தாக்கல் செய்யவுள்ளார்.

"BC பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்" - நாடாளுமன்றத்தில் திமுக MP  மசோதா தாக்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

3.2.2023 (இன்று) மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திரு.பி.வில்சன் அவர்களால், அரசியலமைப்பின் 16-வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்து பதவி உயர்வு மற்றும் அதன் பலனாக பணி மூப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் புதிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது!

------------------------------------------------

அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா 2022

இந்திய அரசியலமைப்பை திருத்துவதற்கான மற்றுமொரு மசோதா

பொருள்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை

1. அரசியலமைப்பானது ஒரு சட்டப்பூர்வ மற்றும் சமூக ஆவணமாக இருப்பதால், அது மாறும் இயல்பு கொண்டதாக இருக்க வேண்டும். சமூகத்தின் தேவைகள் மாறி வருவதாலும், புதிய சிந்தனைகள் உருவாகி வருவதாலும், இந்திய மக்களின் நலனுக்காக அரசியலமைப்புச் சட்டம் அவ்வப்போது மாற வேண்டும். மக்கள் நலனில் தற்போது இருக்கும் முட்டுக்கட்டைகள் அகற்றப்படாவிட்டால், அரசியல் சாசனம் அரசியலமைப்புச் சட்டம் கிட்டத்தட்ட சீர்குலைந்துவிடும்.

2. அரசியலமைப்பின் பிரிவு 16(4) தொடக்க நியமனங்களில் இடஒதுக்கீட்டிற்கு மட்டுமே வழிவகுத்ததால், பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடுகளின் பலனை விரிவுபடுத்துவதற்காக அரசியலமைப்பின் 77 வது திருத்த சட்டம்,1995 ஆனது பிரிவு 16 (4 A ) ஐ இணைத்தது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் பதவி உயர்வுகளில் தொடர்ந்து இடஒதுக்கீடு வழங்குவது அவசியம் என்று நாடாளுமன்றம் கருதியது. ஆயினும், இந்த திருத்தமானது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (Other Backward Classes) கருத்தில் கொள்ளவில்லை.

"BC பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்" - நாடாளுமன்றத்தில் திமுக MP  மசோதா தாக்கல்!

3. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சந்திக்கும் பாகுபாடுகள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சந்திக்கும் பாகுபாடுகளின் அளவோடு ஒப்பிடத்தக்கது. மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் மட்டுமே வகைப்படுத்தும் அருவருக்கத்தக்க மற்றும் மனிதாபிமானமற்ற முறை, அவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லாதது போன்றவை அமைப்பு ரீதியான ஒடுக்குமுறைக்கும் பாகுபாட்டிற்கும் வழிவகுத்தது. இந்த வகுப்பு ரீதியான பாகுபாட்டின் விளைவானது, பொருளாதார ரீதியிலானது மட்டுமல்ல.. மாறாக சமூகம் மற்றும் உளவியல் ரீதியானது, இதுவே அரசியலமைப்பில் பிரிவு 16(4) ஐ நுழைக்க முதன்மைக் காரணமாக அமைந்தது.

4. நமது அரசியலமைப்பை நிறுவியவர்கள் அரசியலமைப்பின் 14,15 மற்றும் 16 வது பிரிவுகளை விரிவான முறையில் வடிவமைத்துள்ளனர். வறுமையில் வாடும், இருளில் வளரும், செல்வமோ செல்வாக்கோ இல்லாத, கல்வி இல்லாத, மிகக் குறைந்த உயர்கல்வி மற்றும் சமூக ஒடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பலவீனமான மற்றும் நலிவடைந்த பிரிவினர் சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் சட்டங்களின் சமமான பாதுகாப்பை மறுக்கக்கூடாது அல்லது மதத்தின் அடிப்படையில் அல்லது இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் போன்றவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்ய வேண்டும். முதன்மைக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருந்து வரலாற்று ரீதியாக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இவர்களுக்கு பொது வேலை வாய்ப்புகள் போன்ற அம்சங்களில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினர் அரசியலமைப்பு ரீதியாக சமூக ரீதியாக பின்தங்கியவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.,

ஆனால் ஆனால் பதவி உயர்வுகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான காரணிகள் இதுவரை இல்லை. இத்தகைய சேர்க்கப்படாததன் காரணமாகவும், சமூக அந்தஸ்து காரணமாக பதவி உயர்வுகளுக்கு ஒருபோதும் பரிசீலிக்கப்படாததன் காரணமாகவும் நிர்வாகத்தின் உயர் பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெருமளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை. பதவி உயர்வுகளில் இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடுகளை வழங்க மாநிலங்கள் விரும்பினாலும், அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் இல்லாததால் அதனை செயல்படுத்த முடியவில்லை.

"BC பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்" - நாடாளுமன்றத்தில் திமுக MP  மசோதா தாக்கல்!

5. சமீபத்தில், நாடாளுமன்றமானது இடஒதுக்கீட்டின் பலனை, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் எனும் வகைக்குள் முன்னேறிய வகுப்பினருக்கும் விரிவுபடுத்தியது. அதனால், அரசு வேலைவாய்ப்புகளில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் ஒவ்வொரு முறையும் இன்னும் அதிகமான சாதிய அடக்குமுறைகள் நடைபெற வாய்ப்புள்ளது.

6. பதவி உயர்வுகளில் மேற்கூறப்பட்ட அரசியலமைப்பு நெறிமுறைகள் இல்லாததன் காரணமாக, உண்மையிலேயே ஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் இன்று வரை முக்கிய பகுதிகளில் கொண்டுவரப்படவில்லை. பணியில் சேர்ந்தால் மட்டும் போதாது. பதவி உயர்வுகளில் இதர பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையாக பிரதி நிதித்துவம் அளித்தால் மட்டுமே, உண்மையான பிரதிநிதித்துவ நிர்வாகத்தை அடைய முடியும் மற்றும் உண்மையான கணிசமான சமத்துவம் செயல்படுத்தப்படும். இத்தகைய வரலாற்று அநீதி இன்னும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மக்களுக்கு இழைக்கப்படுகிறது மற்றும் உயர் பதவிகளில் அவர்களுக்கு உரிய பங்கு மறுக்கப்படுகிறது. மேலும், இன்று வரை அவர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.

"BC பிரிவினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்" - நாடாளுமன்றத்தில் திமுக MP  மசோதா தாக்கல்!

7. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 16-ஆவது பிரிவில் மேலும் திருத்தம் செய்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பணி மூப்புடன் கூடிய பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மற்றும் நிர்வாகத்தின் உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதன் மூலம் மட்டுமே உண்மையான சமூக நீதியை ஏற்படுத்த முடியும்.

8. எனவே போதுமான சமத்துவத்தை அடைவதற்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்குவது கட்டாயமாகும்.

9. எனவே மேற்குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ள முன்மொழியப்படுகிறது.

- பி.வில்சன், மாநிலங்களவை (ராஜ்ய சபா)உறுப்பினர்.

banner

Related Stories

Related Stories