அரசியல்

"இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு நேர்ந்தது விபத்துதான், கொலை அல்ல" -பாஜக அமைச்சர் கருத்தால் சர்ச்சை !

இந்தியாவின் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நேர்ந்தது விபத்துதான் என பாஜக அமைச்சர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு நேர்ந்தது விபத்துதான், கொலை அல்ல" -பாஜக அமைச்சர் கருத்தால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி 20ம் தேதி ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்து அங்கு ம் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.

"இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு நேர்ந்தது விபத்துதான், கொலை அல்ல" -பாஜக அமைச்சர் கருத்தால் சர்ச்சை !

இறுதியாக இந்த நடைபயணம் கடந்த 30-ம் தேதி ஸ்ரீநகரில் வெற்றிகரமாக முடித்தது. அதனைத் தொடர்ந்து ஒற்றுமை பயண நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய ராகுல் காந்தி, தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலை குறித்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்து, வன்முறையை தூண்டும் மோடி, அமித் ஷா, பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்றோருக்கு அந்த வலி ஒருபோதும் புரியாது. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு புரியும் என்று கூறினார்.

அவரின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக கணேஷ் ஜோஷி செயல்பட்டு வருகிறார்.

"இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு நேர்ந்தது விபத்துதான், கொலை அல்ல" -பாஜக அமைச்சர் கருத்தால் சர்ச்சை !

ராகுல் காந்தி தொடர்பாக பேசிய அவர், "தியாகம், இந்திரா காந்தி குடும்பத்துக்கு மட்டும் சொந்தமானது அல்ல.இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சாவர்க்கர், சந்திரசேகர் ஆசாத் போன்றோர்தான் தியாகம் செய்திருக்கின்றனர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோருக்கு நேர்ந்தது விபத்துதான். அது கொலை அல்ல. விபத்துக்கும் கொலைக்கும் வித்தியாசம் இருக்கிறது" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories