அரசியல்

“அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷம்?”-போலிஸுக்கும் தொண்டர்களுக்கும் வெடித்த மோதல்:களேபரமான உ.பி

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு காவல்துறையினர் கொடுத்த டீயில் விஷம் கலந்திருப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷம்?”-போலிஸுக்கும் தொண்டர்களுக்கும் வெடித்த மோதல்:களேபரமான உ.பி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சி சமாஜ்வாதி. உபியில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.

“அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷம்?”-போலிஸுக்கும் தொண்டர்களுக்கும் வெடித்த மோதல்:களேபரமான உ.பி

மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்ததில் இருந்தே பல்வேறு சம்பவங்கள் அங்கு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமாஜ்வாதி கட்சி நிர்வாகிகள் மீது உ.பி. போலீசார் கடுமையாக நடந்து கொள்வதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் மீது போலி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டும் வருவதாக சமாஜ்வாதி கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

“அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷம்?”-போலிஸுக்கும் தொண்டர்களுக்கும் வெடித்த மோதல்:களேபரமான உ.பி

இருப்பினும் பாஜக ஆட்சியில் நடக்கும் கொடுமைகளை பொதுமக்களுக்கு வெளிக்கொண்டுவர, அகிலேஷ் யாதவ் தனிப்படை குழு அமைத்து செயல்பட்டு வருகிறார். அதில் உபியில் அரங்கேறும் சட்ட ஒழுங்கு பிரச்னை, முஸ்லிம் மீதான அடக்குமுறைகள், பாஜகவினர் செய்யும் குற்றங்கள் போன்றவையும் அடங்கும்.

இவர்களது செயல் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்த குழுவை காவல்துறையினர் கட்டுப்படுத்த முனைப்பு காட்டி வருகின்றனர். அந்த வகையில் சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகியும், அகிலேஷுக்கு நெருக்கமானவராக இருந்த மணீஷ் ஜெகன் அகர்வால் என்பவரை காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.

“அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷம்?”-போலிஸுக்கும் தொண்டர்களுக்கும் வெடித்த மோதல்:களேபரமான உ.பி

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மணீஷ் ஜெகன், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சில விமர்சனங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதையடுத்து முதல்வர் பற்றி அவதூறு பரப்புவதாக கூறி அவரை காவல்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். மணீஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் நிர்வாகிகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கடும் கோபம் கொண்ட அகிலேஷ் யாதவ், மணீஷை காவல்துறையினர் விடுவிக்கவில்லை என்றால், மாநிலம் முழுவதும் சமாஜ்வாதி போராட்டம் நடத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் இன்று தனது கட்சி நிர்வாகிகளுடன் லக்னோவில் உள்ள உ.பி. டிஜிபி அலுவலகத்திற்கு அகிலேஷ் யாதவ் சென்றார். அப்போது அவர் வந்து பல மணி நேரங்கள் ஆகியும், அவரை மதித்து எந்தவொரு காவல்துறை அதிகாரிகளும் வரவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அதோடு இது தொடர்பான விடியோவையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

“அகிலேஷ் யாதவுக்கு கொடுக்கப்பட்ட டீயில் விஷம்?”-போலிஸுக்கும் தொண்டர்களுக்கும் வெடித்த மோதல்:களேபரமான உ.பி

தொடர்ந்து அதிகாரிகள் வந்ததும் அவர்களிடம் மணீஷ் அகர்வால் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பாக அகிலேஷ் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கே சக போலிஸ் ஒருவர் அகிலேஷுக்கு டீ எடுத்து வந்துள்ளார். இதனை கண்டதும் கோபமடைந்த அகிலேஷ், அதனை வாங்க மறுத்துள்ளார்.

மேலும் "யோகி ஆதித்யநாத்தின் கைப்பாவையான நீங்கள், இந்த டீயில் விஷம் கலந்திருப்பீர்கள். நான் இந்த டீயை குடிக்க மாட்டேன்" என்றும் கூறினார். இது காவல் உயரதிகாரிகளுக்கு எரிச்சலூட்டவே, உடனே அவர்களுக்கும் அகிலேஷுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதனால் கடும் அதிரமடைந்த அகிலேஷ் அங்கிருந்து வெளியேறினார்.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories