அரசியல்

அதிமுக vs திமுக ஆட்சி புயல்கள்: சேதமடைந்த மின்கம்பங்களின் எண்ணிக்கையை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

கடந்த அதிமுக ஆட்சியின்போதுள்ள புயலின்போது சேதமடைந்த மின்கம்பங்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.

அதிமுக vs திமுக ஆட்சி புயல்கள்: சேதமடைந்த மின்கம்பங்களின் எண்ணிக்கையை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பருவமழை காரணமாக புயல்கள் வருவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு வரும் புயல்களால் பொதுமக்களுக்கு அதிகபடியான சேதாரங்கள் ஏற்படுகிறது. அதோடு வீடுகளில் தண்ணீர் ஊடுருவது, சாலையில் தண்ணீர் தேங்குவது என பொதுமக்களுக்கு பல இடையூறுகள் ஏற்படுவதும் வழக்கமாக உள்ளது.

அதுமட்டுமின்றி பொது சொத்துக்களும் சேதாரம் உண்டாகும். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ‘மின்கம்பங்கள்’. புயல் காற்றின் காரணமாக மரங்கள் சாய்வதுடன் சேர்ந்து அதிகப்படியான மின்கம்பங்களும் சாய்ந்து பாதிப்பு ஏற்படும்.

அதிமுக vs திமுக ஆட்சி புயல்கள்: சேதமடைந்த மின்கம்பங்களின் எண்ணிக்கையை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

இந்த நிலையில் இந்தாண்டு சென்னையில் வந்த ‘மாண்டஸ்’ புயலால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். ஆனால் அவர்கள் இனி அச்சப்பட தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் திமுக அரசு தெளிவுடன் செயல்பட்டது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் சென்னை தூய்மை படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மழை காலம் தொடங்க போகிறது என்பதால் முழு வீச்சுடன் மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்றது.

அதிமுக vs திமுக ஆட்சி புயல்கள்: சேதமடைந்த மின்கம்பங்களின் எண்ணிக்கையை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

இந்த வடிகால் பணிகளால் இந்தாண்டு பெய்த மழை, புயலில் வெள்ள நீர் சாலையில் தேங்காமல் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி புயலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முறையாக கையாண்டது. இதனால் இந்த புயலில் சேதாரங்கள் அதிகமாக காணப்படவில்லை. மேலும் ஆங்காங்கே சரிந்த மின்கம்பங்களும் உடனடியாக மின்துறை சார்பில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அகற்றினர்.

அதுமட்டுமின்றி, புயல் வந்ததற்கான வடுவே இல்லாத வகையில் தூய்மை பணியாளர்களும் தங்கள் வேலைகளை திறம்பட செய்தனர். இருப்பினும் சில இடங்களில் சில தவிர்க்க முடியாத சேதங்கள் ஏற்பட்டன. இருந்த போதிலும், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதாரங்கள் ஏற்படாமல் பல மடங்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த புயலினால் ஏற்பட்ட மின்கம்பங்களின் சேதங்கள் குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதில், "தேனினும் இனிய தமிழ் பேசிடும் மக்கள், வானினும் உயர்வாக வணங்கிடும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் பராமரிப்பு பணிகளாலும், மாண்டோஸ் புயலால் 1134 மின் கம்பங்கள் மட்டுமே..

2011 : தானே புயலால் 52,000 மின் கம்பங்கள் சேதம்.

2016 : வர்தா புயலால் 49,100 மின் கம்பங்கள் சேதம்.

2017 : ஒக்கி புயலால் 15,858 மின் கம்பங்கள் சேதம்.

2018 : கஜா புயலால் 3.30 லட்சம் கம்பங்கள் சேதம்.

2020 : நிவர் புயலால் 8,000 மின் கம்பங்கள் சேதம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்தான் அதிகப்படியான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories