அரசியல்

“இது பெரிய கேவலம்.. ரபேல் வாட்ச்சை கட்டியிருப்பதற்கு அண்ணாமலை வெட்கப்பட வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன் சாடல்!

ரபேல் கம்பெனி வாட்ச்சை கையில் கட்டி இருப்பதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெட்கப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.

“இது பெரிய கேவலம்.. ரபேல் வாட்ச்சை கட்டியிருப்பதற்கு அண்ணாமலை வெட்கப்பட வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்தபோது, தற்போதைய நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் கூலி உயர்வுக்காக நடந்த போராட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 44 தலித் மக்கள் நிலச்சுவான்தார்களால் ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று.

நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வெண்மணி படுகொலை சம்பவத்தில் பலியானவர்களுக்கு வருடாவருடம் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி 54 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு கீழ் வெண்மணி கிராமத்தில் எரிக்கப்பட்ட ராமையாவின் குடிசை வீட்டை புதுப்பித்து இன்று அனுசரிக்கப்பட்டது.

“இது பெரிய கேவலம்.. ரபேல் வாட்ச்சை கட்டியிருப்பதற்கு அண்ணாமலை வெட்கப்பட வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன் சாடல்!

செங்கொடியை ஏற்றிவைத்து வெண்மணி நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் மார்க்சியம், கல்லூரி மாணவ மாணவிகள், திராவிட அமைப்பை சேர்ந்த ஏராளமானோர் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். வெண்மணி தியாகிகள் நினைவு நிகழ்ச்சியில் சி.பி.எம் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “எந்த நில சுவாந்தர்களுக்கு எதிராக வெண்மணி தியாகிகளின் உயிர் பறிக்கப்பட்டதோ அவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும்.

“இது பெரிய கேவலம்.. ரபேல் வாட்ச்சை கட்டியிருப்பதற்கு அண்ணாமலை வெட்கப்பட வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன் சாடல்!

இதுவரை உழுபவர்களுக்கே நிலம் சொந்தமாகாமல் கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் பல்லாயிரக்கணக்கான நிலங்களை வளைத்து வைத்து இருக்கிறார்கள். உழுபவர்களுக்கே நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மோசமான பொருளாதார கொள்கைகளை கடைபிடிக்கும் மோடி அரசு, தமிழகத்தில் உள்ள பஞ்சாலைகள், நூற்பாலைகள் நாசமாகி விட்டன, மாநில உரிமை பறிப்பு, மொழி உரிமை பறிப்பு என அடுக்கடுக்கான தாக்குதல் ஒன்றிய அரசால் தமிழகத்தின் மீது நடத்தப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநர் ர.வி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முன்னணி ஊழியர் போல செயல்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

“இது பெரிய கேவலம்.. ரபேல் வாட்ச்சை கட்டியிருப்பதற்கு அண்ணாமலை வெட்கப்பட வேண்டும்”: கே.பாலகிருஷ்ணன் சாடல்!

ரவி ஆளுநராக இருக்க வேண்டும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராக இருந்தால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, சிறு குறு உற்பத்தியாளர்கள் பாதிப்பு போன்ற ஒன்றிய அரசின் மோசமான தவறுகளை தமிழகத்தில் மறைக்கவே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இதுபோன்ற போராட்டங்களை நடத்தி நாடகம் போடுகிறார்.

ரபேல் கம்பெனி வாட்ச்சை கையில் கட்டி இருப்பதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெட்கப்பட வேண்டும். சுதேசி கொள்கைகளை பேசிக்கொண்டு 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டி இருக்கிறேன் என்று சொல்வது எவ்வளவு பெரிய கேவலம். இந்தியாவில் வேறு வாட்ச் கம்பெனி இல்லையா? உண்மையாகவே பணம் கட்டி வாட்ச்சை வாங்கி இருந்தால் ரசீதை காட்ட வேண்டும். ரபேல் கம்பெனியில் நடந்த முறைகேட்டை இதுவும் ஒரு முறைகேடு என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories