அரசியல்

“நாட்டுக்காக உங்க வீட்டு நாயாவது உயிரிழந்திருக்கிறதா..?” - பாஜகவை விளாசிய காங்கிரஸ் தலைவர் !

"நாட்டுக்காக உங்க வீட்டு நாயாவது உயிரிழந்திருக்கிறதா?" என பாஜகவை கடுமையாக சாடிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“நாட்டுக்காக உங்க வீட்டு நாயாவது உயிரிழந்திருக்கிறதா..?” - பாஜகவை விளாசிய காங்கிரஸ் தலைவர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'இந்திய ஒற்றுமை பயணம்' பாதயாத்திரையை 150 நாட்கள் 12 மாநிலங்களில் மேற்கொண்டு வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி தொடங்கிய இந்த நடைபயணம் தற்போது ராஜஸ்தானில் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தை குறித்து பாஜக பல்வேறு விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். இருப்பினும் தனது இலக்கை நோக்கி தொடர்ந்து நிமிர்ந்த நன்னடை போட்டு வருகிறார் ராகுல் காந்தி. இவரது நடைப்பயணத்தில் பல்வேறு பிரபலங்கள் பொதுமக்கள் பலரும் அணிதிரண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

“நாட்டுக்காக உங்க வீட்டு நாயாவது உயிரிழந்திருக்கிறதா..?” - பாஜகவை விளாசிய காங்கிரஸ் தலைவர் !

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் மேற்கொள்ளும் இவரது நடைப்பயணத்தில் கலந்துகொண்ட தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தார். அப்போது பேசிய அவர், நாட்டிற்காக பாஜக, RSS ஒரு நாயாவது இழந்திருக்குமா என்று கேள்வியெழுப்பினார்.

“நாட்டுக்காக உங்க வீட்டு நாயாவது உயிரிழந்திருக்கிறதா..?” - பாஜகவை விளாசிய காங்கிரஸ் தலைவர் !

தொடர்ந்து பேசிய அவர், "நாட்டுக்காக இந்தியாவின் பழம்பெரும் கட்சி (காங்கிரஸ்) சுதந்திரம் பெற்று தந்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களின் உயிரையே தியாகம் செய்துள்ளனர். உங்கள் வீட்டில் உள்ள நாயாவது இந்த நாட்டுக்காக இறந்திருக்கிறதா? இன்னும், அவர்கள் (பாஜக) தங்களை தேசபக்தர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். நாங்கள் ஏதாவது சொன்னால் நாங்கள் தேச விரோதிகள் என்று அழைக்கப்படுகிறோம்" என்றார். இவரது இந்த விமர்சனம் பாஜகவினர் மத்தியில் பல்வேறு கண்டங்களை எழுப்பியது.

“நாட்டுக்காக உங்க வீட்டு நாயாவது உயிரிழந்திருக்கிறதா..?” - பாஜகவை விளாசிய காங்கிரஸ் தலைவர் !

இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் காரசார விவகாரம் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது தொடர்பான விவகாரங்களும் தொடர் விவாதங்களை எழுப்பி வருகிறது.

மல்லிகார்ஜுன கார்கே, தான் கூறிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அது எப்படி பாஜகவினரை ஒரு நாயுடன் ஒப்பிட முடிகிறது என்றும் கடும் கண்டனம் எழுந்தது. மேலும் இதற்கு நிச்சயம் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூட்டத்தொடரில் பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

“நாட்டுக்காக உங்க வீட்டு நாயாவது உயிரிழந்திருக்கிறதா..?” - பாஜகவை விளாசிய காங்கிரஸ் தலைவர் !

இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், "மல்லிகார்ஜுன கார்கேவின் கருத்து, அவர் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்திய விதம் மற்றும் பொய்யைப் பரப்ப முயன்ற நோக்கம் ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம். அல்வாரில் புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

இதைத்தொடர்ந்து பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "நாடாளுமன்றத்தில் சீன எல்லை பிரச்னை குறித்த விவாதம் நடைபெறுவதை அனுமதிக்காத பாஜக அரசு வெளியில் சிங்கம் போல் பேசுகிறார்கள். ஆனால், பார்த்தால் எலி போல் செயல்படுகிறார்கள்" என்றார்.

தொடர்ந்து "நான் இங்கே மீண்டும் சொன்னால், பாஜகவினருக்கு அது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால், சுதந்திர போராட்டத்தின் போது மன்னிப்பு கேட்டவர்கள், சுதந்திரத்திற்காக போராடியவர்களிடம் மன்னிப்பு வேண்டும் என கேட்கிறார்கள்.

“நாட்டுக்காக உங்க வீட்டு நாயாவது உயிரிழந்திருக்கிறதா..?” - பாஜகவை விளாசிய காங்கிரஸ் தலைவர் !

காங்கிரஸ் இந்தியாவைப் பிரிக்க யாத்திரை நடத்துகிறது என்றார்கள். அப்போதுதான் நான் சொன்னேன், காங்கிரஸ் எப்போதும் இந்தியாவை ஒன்றிணைக்கும் வேலையை செய்கிறது. இதற்காக இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்கள் உயிரைக் கொடுத்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள்?

ராஜஸ்தானின் அல்வாரில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது நான் சொன்னது சபைக்கு வெளியே கூறியது. நான் சொன்னது அரசியல் ரீதியாக சபைக்கு வெளியே, சபைக்கு உள்ளே அல்ல. அதைப் பற்றி இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை" என்று கூறினார். மல்லிகார்ஜுன கார்கேவின் இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories