அரசியல்

"குஜராத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க என்னிடம் டீல் பேசியது" - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு !

குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தன்னிடம் பாஜக டீல் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

"குஜராத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க என்னிடம் டீல் பேசியது" - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் கட்சியில் இழுத்து வருகிறது. எதிர்கட்சிகளை மட்டுமின்றி கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களையும் தங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறது. இதன் மூலம் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தும் இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய கெஜ்ரிவால் அதில் வெற்றி பெற்று பாஜகவின் முகத்தில் கரியை பூசினார்.

"குஜராத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க என்னிடம் டீல் பேசியது" - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு !

அதைத் தொடர்ந்து தெலுங்கானாவில் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய முயற்சியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்தான் என்பதற்கான வீடியோவை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்டுள்ளார்.

இதனிடையே பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், அங்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் உள்ளது. அதே நேரம் அங்கு ஆம் ஆத்மீ கட்சியும் முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

"குஜராத் தேர்தல் தொடர்பாக பா.ஜ.க என்னிடம் டீல் பேசியது" - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு !

இந்த நிலையில், குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தன்னிடம் பாஜக டீல் பேசியதாக அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்.டி டிவி நடத்திய கருத்தரங்கில் பேசிய கெஜ்ரிவால், "குஜராத் சட்டமன்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என பாஜக அஞ்சுகிறது. ஆம் ஆத்மியில் இருந்து விலக வேண்டும் என்ற ஆஃபரை மணிஷ் சிசோடியா நிராகரித்ததால், பாஜக ) தற்போது என்னை தொடர்பு கொண்டுள்ளது. குஜராத்தில் போட்டியிடாவிட்டால் ஆம் ஆத்மியின் சத்யேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக கூறினர்" எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories