அரசியல்

சாதி பெயரை வெளியே சொல்வது அவமானம் என்று கருதும் சாதனையை படைத்தது திராவிட இயக்கம் - கனிமொழி எம்.பி பேச்சு!

தமிழ்நாட்டில் ஜாதி பெயரை வெளியில் சொல்வது அவமானம் என்ற நிலைக்கு தமிழர்கள் வந்துள்ளார்கள் என்றால் அந்த சாதனை செய்தது திராவிட இயக்கம் தான் என கனிமொழி எம்.பி பேசியுள்ளார்.

சாதி பெயரை வெளியே சொல்வது அவமானம் என்று கருதும் சாதனையை படைத்தது திராவிட இயக்கம் - கனிமொழி எம்.பி பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிடி.தியாகராய அரங்கி,ல் சென்னை திருவள்ளூர் கழக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் கருத்தரங்கம் மற்றும் சிறப்பாக செயல்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா தியாகராய நகர் மேற்கு பகுதி செயலாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திமுக துணை பொதுச் செயலாளரும், மகளிரணி செயலாளருமான கனிமொழி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளர் மயிலை.தா.வேலு MLA ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். இதில் கழகச் சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பழ.செல்வகுமார், வினோத் காந்தி, சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை காக்க சிறப்பாக செயலாற்றி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசின் மாநில திட்ட குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில், பூவுலகின் நண்பர்கள் ஆர்.ஆர்.சீனிவாசன், உணவுக் காடு செயற்பாட்டாளர் இறையழகன், கழகச் சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் மணி சுந்தர், மாநில திட்ட குழு கொள்கை ஆலோசகர் கார்த்திகேயன் உள்ளிட்ட 27 பேருக்கு நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் கனிமொழி விருதினை வழங்கி கௌரவித்தார்.

சாதி பெயரை வெளியே சொல்வது அவமானம் என்று கருதும் சாதனையை படைத்தது திராவிட இயக்கம் - கனிமொழி எம்.பி பேச்சு!

பின்னர் மேடையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி எல்லோருக்கும் படிக்க கூடிய சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும், நம்மை பார்த்து எல்லா மாநிலங்கள் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருவதாக பெருமையுடன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாம் தற்போது சமூக நீதியின் மற்றொரு பரிணாமத்தில் இருக்கிறோம். ஜாதி இன்னும் ஒழிந்து விடவில்லை; தமிழ்நாட்டில் இன்னும் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் சென்று கேட்டால் தங்கள் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை சேர்த்து சொல்வார்கள். தமிழ்நாட்டில், பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போடுவதை ஒழித்தது திராவிட இயக்கங்கள் தான்.

சாதி பெயரை வெளியே சொல்வது அவமானம் என்று கருதும் சாதனையை படைத்தது திராவிட இயக்கம் - கனிமொழி எம்.பி பேச்சு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெளிமாநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கும் பொழுது அவர்களது பெயரை அங்கு இருப்பவர்கள் கேட்பார்கள். அப்போது அவர்களை எங்கு பொருத்துவது என்று அவர்களுக்கு தெரியாது. நம்மை தமிழன் என்று எல்லோருக்கும் தெரியும், நம்மை ஒரு ஜாதிக்குள் அடைக்க முடியாது, கேள்விகள் கேட்டு கொண்டே இருக்கலாம்.

ஜாதியை நாம் கடந்து வந்து இருக்கிறோம். ஜாதியை பெருமையுடன் வெளியே செல்வது அவமானம் என்ற நிலைக்கு தமிழர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அந்த சாதனயை செய்தது திராவிட ஆட்சி தான். இன்னும் நாம் அதிலிருந்து கடந்து வர வேண்டும்.

சாதி பெயரை வெளியே சொல்வது அவமானம் என்று கருதும் சாதனையை படைத்தது திராவிட இயக்கம் - கனிமொழி எம்.பி பேச்சு!

எல்லோருக்கும் படிக்க கூடிய சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். நம்மை பார்த்து எல்லா மாநிலங்கள் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து இருக்கிறார்.

ஒரு குடும்பத்தில் பெண் பிறந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் உச்சபட்ச கடமை என நினைத்தனர். பெண்கள் படித்தால் போதும் என 10 ஆம் வகுப்பாவது படித்து விட வேண்டும் என்று திருமண உதவி திட்டத்தை கொண்டு வந்தார். சிறிய சிறிய ஊர்களில் எல்லாம் பள்ளி கூடங்களை கட்டியது திமுக அரசு.

சாதி பெயரை வெளியே சொல்வது அவமானம் என்று கருதும் சாதனையை படைத்தது திராவிட இயக்கம் - கனிமொழி எம்.பி பேச்சு!

சமூக நீதியை நாங்கள் வெறுமனே பேசவில்லை, அதற்கான கட்டுமானத்தை உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு கட்டமாக நாம் சமூக நீதியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம். பெண்களுக்கு 1000 வழங்கும் திட்டம் சமூக நீதியின் ஒரு அங்கம்.

காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் மிக பெரிய பிரச்சனையாக உள்ளது. எனது தாயாருக்கு உடல் நிலை சரியில்லை, ஜெர்மனிக்கு அழைத்து சென்று இருந்தேன். அங்கு மழை பெய்ய கூடிய பருவத்தில் மழை பெய்யவில்லை, அங்கு இருந்த விவசாயிகள் கவலை பட்டனர். எந்த நேரத்தில் என்ன நிலை என்று தெரியாத அளவுக்கு காலநிலை மாறி வருகிறது.

சாதி பெயரை வெளியே சொல்வது அவமானம் என்று கருதும் சாதனையை படைத்தது திராவிட இயக்கம் - கனிமொழி எம்.பி பேச்சு!

காலநிலை மாற்றத்தின் அபாயத்தை புரிந்து கொண்டு அரசு தன் செயல்பாடுகளை முன்னெடுத்து வைத்து வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் எல்லா உணவுகளிலும் உள்ளது. தாய் பாலில் கூட பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளது என்ற செய்தியை பார்க்கிறோம். அந்த அளவுக்கு நம் நிலை இருக்கிறது. அதற்காக தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம். இது மட்டும் போதாது, சுற்று சூழல் அணி முன்னெடுக்க வேண்டிய செயல்கள் நிறைய இருக்கிறது. நிறுவன கழிவுகள், சிறிய சிறிய செயல்கள் மூலம் சுற்று சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார்கள்.

சாதி பெயரை வெளியே சொல்வது அவமானம் என்று கருதும் சாதனையை படைத்தது திராவிட இயக்கம் - கனிமொழி எம்.பி பேச்சு!

இன்று நமது குழந்தைகளுக்கு நிறையை விட்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறோம், அவர்களுக்கு இந்த உலகதையாவது விட்டு செல்வோம். நிறைய இளைஞர்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று எங்களுக்கு இருக்குமா இல்லையா என்ற பயம் இருக்கிறது.

கடல் சார்ந்த வாழ்கையை வாழும் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், அவர்களுக்கு வாழ்கை என்னவாகும், இவ்வாறு காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கபடுவது அடித்தட்டு மக்கள் தான். வசதி படைத்தவர்கள் வேறு இடங்களுக்கு சென்று இன்னும் சில காலம் வாழ்வார்கள். காலநிலை பற்றி நாங்கள் பேசுவதை விட நீங்கள் இளைஞர்கள் பேசுவது தான் சரியாக இருக்கும்” என்றார்.

banner

Related Stories

Related Stories