அரசியல்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி.. எஸ்.முரளிதர் பரிந்துரை நிறுத்தி வைத்து பழிவாங்கிய மோடி அரசு!

ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு நரேந்திர மோடி அரசு மறுப்பு தொவித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி.. எஸ்.முரளிதர் பரிந்துரை நிறுத்தி வைத்து பழிவாங்கிய மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு நரேந்திர மோடி அரசு மறுப்பு தொவித்துள்ளது. முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு கொலிஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில், அந்தப் பரிந்துரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி புதிய பரிந்துரைகளை அளித்து இருந்தது.

ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல், ராஜஸ்தான் மாநில தலைமை நீதிபதியாகவும், ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்வந்த், ஒடிசா மாநில உயர்ந்திமன்ற தலைமை நீதிபதியாகவும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.வராலே, கர்நாடக மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற நீதிபதி அலி மொகமத் மார்கிரே. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் கொலிஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி.. எஸ்.முரளிதர் பரிந்துரை நிறுத்தி வைத்து பழிவாங்கிய மோடி அரசு!

மேலும் உத்தரகாண்ட் உயர்ந்தி மன்ற நீதிபதி சஞ்சய் குமார் மிஸ்ரா, ஜார்க்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்திற்கும், கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி வினோத் சந்திரன், மும்பை உயர் நீதிமன்ற நீதிமன்றத்திற்கும், ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி அப்ரேஷ்குமார் சிங் திரிபுரா மாநில உயர்நீதிமன்றத்திற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தனர். இந்த பரிந்துரைகளுக்கு செவ்வாயன்று ஒப்புதல் வழங்கிய நரேந்திர மோடி அரசு, ஒடிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.முரளிதரை, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமித்து வழங்கிய பரிந் துரையை மட்டும் ஏற்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

முன்பு ஒருமுறை, நீதிபதி கே.எம். ஜோசப்பை உச்சநீதிமன்றத்திற்கு கொலீஜியம் பரிந்துரை செய்த போது, ஒன்றிய அரசு அதனை ஏற்காமல் பிடிவாதம் காட்டியது. இது நாடு முழுவதும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், ஒருவழியாக அந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் தான், ஒன்றிய பா.ஜ.க, அரசானது, மீண்டும் நீதிபதி எஸ்.முரளிதர் பணியிடமாற்ற விவகாரத்தில் கொலிஜியம் முடிவோடு முரண்பட்டு, நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளது.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி.. எஸ்.முரளிதர் பரிந்துரை நிறுத்தி வைத்து பழிவாங்கிய மோடி அரசு!

அரசின் தவறைச் சாடிய நீதிபதி

கடந்த 2020ஆம் ஆண்டு , குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் முஸ்லிம்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது, பா.ஜ.க. உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரத்தை சேர்ந்த கும்பல் டெல்லி முழுவதும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டது. இதில் 54 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.

எனினும், இந்த வன்முறைக்கு காரணமான இந்துத்துவா மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் மீது ஒன்றிய அரசின் உள்துறை கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்தது. அப்போது இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் எஸ்.முரளிதர், டெல்லி காவல்துறையை கையில் வைத்திருக்கும் ஒன்றிய அரசை நேரடியாக கடுமையாக சாடினார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி.. எஸ்.முரளிதர் பரிந்துரை நிறுத்தி வைத்து பழிவாங்கிய மோடி அரசு!

1984ஆம் ஆண்டு போன்ற மற்றொரு நிகழ்வை இந்த நாட்டில் நடக்க அனுமதிக்க முடியாது என்று காட்டமாக கூறிய அவர், பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர், டெல்லி பா.ஜ.க. தலைவர்கள் பர்வேஷ்வர்மா, அபய்வர்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய வும் உத்தரவிட்டார்.

இது ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், தீர்ப்பளித்த அன்றே, இரவோடு இரவாக நீதிபதி எஸ்.முரளிதர் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். டெல்லி பார் அசோசியேசன் இந்த இடமாற்றத்தை கடுமையாக விமர்சித்தது. டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்றத்தைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

சர்வதேச வழக்கறிஞர்கள் குழு, நரேந்திர மோடி அரசின் பழிவாங்கல் குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியது. நீதிபதியின் இடமாற்றம் வழக்கமானது என்றும், பிப்ரவரி 12 ஆம் தேதியே, அவரைப் பணியிடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை அளித்திருந்ததாகவும், அதன் படியே நீதிபதி எஸ்.முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் சமாளித்தது.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவி.. எஸ்.முரளிதர் பரிந்துரை நிறுத்தி வைத்து பழிவாங்கிய மோடி அரசு!

வழக்கறிஞர் பணிக்குத் தீங்கு!

ஆனால், டெல்லி வழக்கறிஞர் சங்கம், எஸ். முரளிதர் போன்றவர்களின் இடமாற்றங்கள் எங்களின் உன்னதமான வழக்கறிஞர் பணிக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுவானமக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் உள்ளது என்று கண்டனம் தெரிவித்தனர்.

எனினும் மோடி அரசு அந்த எதிர்ப்பு களை வழக்கம் போல புறந்தள்ளிவிட்டது. நீதிபதி எஸ்.முரளிதரும், கடந்த 2 ஆண்டுகளில் பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி விட்டு, தற்போது ஒடிசா உயர்நீதிமன் றத் தலைமை நீதிபதியாக பதவியை வகித்து வந்தார்.

இந்நிலையிலேயே, காலியாக இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இடத்திற்கு நியமனம் செய்து உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. அப்போதே மோடி அரசு இந்த பரிந்துரையை ஏற்குமா? என்று பல்வேறு தரப்பினரும் சந்தே கம் எழுப்பினர்.

அதன்படியே, செப்டம்பர் 28ஆம் தேதி கொலிஜியம் அளித்த ஏனைய பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ள ஒன்றிய நரேந்திர மோடி அரசு, நீதிபதி டாக்டர் எஸ். முரளிதரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மட்டும் நிறுத்தி வைத்துள்ளது. இது மறுபடியும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories