அரசியல்

Mr சங்கி சாருக்கு கும்பகர்ண தூக்கம் போல.. எடிட் செய்து வீடியோ வெளியிட்ட BJPக்கு ராஜீவ் காந்தி பதிலடி!

பரமக்குடியில் கடந்த ஆண்டு நடந்த சம்பவத்தை தற்போது நடந்ததுபோல் வீடியோ வெளியிட்டுள்ள பா.ஜ.க-வுக்கு, ஆதாரத்துடன் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பதிலடி கொடுத்துள்ளார்.

Mr சங்கி சாருக்கு கும்பகர்ண தூக்கம் போல.. எடிட் செய்து வீடியோ வெளியிட்ட BJPக்கு ராஜீவ் காந்தி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த ஒருவருடத்திலேயே பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறது. மேலும் தி.மு.க அரசின் திராவிட மாடல் அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக உள்ளது.

இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநில முதலமைச்சர்கள், உலக தலைவர்கள் என தி.மு.க அரசின் பல்வேறு திட்டங்களைப் பாராட்டி வருகின்றனர். இதனால் தி.மு.க அரசு மீது மக்கள் குறைசொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளையும், வீடியோக்களையும் பரப்பி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு கூட அ.தி.மு.கவினர் ஒரு பாட்டியை வைத்து பொய்யான வீடியோவை பரப்பினர். உண்மை வெளிவந்ததும் மக்களே அவர்களை தற்போது திட்டிக் கொண்டு இருக்கின்றனர். தற்போது இதேபாணியில் பா.ஜ.கவினர் கடந்த ஆண்டு வெளிவந்த ஒரு வீடியோவை வெட்டி ஒட்டி தற்போது நடந்தது போன்றுஅதைப் பரப்பி வருகின்றனர்.

Mr சங்கி சாருக்கு கும்பகர்ண தூக்கம் போல.. எடிட் செய்து வீடியோ வெளியிட்ட BJPக்கு ராஜீவ் காந்தி பதிலடி!

ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் ஒன்றியம் போகளூர் ஊராட்சியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரில் இறங்கி வாலிபர் ஒருவர் அரசுக்குக் கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே சாலை சரிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து ஒருவருடம் கழித்து பா.ஜ.க தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார், அந்த வீடியோவை வெட்டி ஒட்டி பட்டி டிங்கரிங் செய்து ஏதோ இப்போது நடந்ததுபோல் வெளியிட்டு அரசை விமர்சித்துள்ளார்.

இவரின் இந்த பொய்யான தகவலுக்கு ஆதாரத்துடன் தக்க பதிலடி கொடுத்துள்ளார் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில், "Mr சங்கி sirக்கு ஒரு வருடமா கும்பகர்ண தூக்கம் போல உடைப்பு ஏற்பட்டது 4/10/202. அதனை 6/10/2021ல் சரி செய்தாச்சு. இந்த சங்கிங்க இப்ப தூக்கிட்டு வாராங்க. இதனையும் ஒரு கூட்டம் நம்பி பரப்புது. அண்ணாமலை நீங்க retweet பன்னலயா!! உங்களுக்கும் அவருக்கும் ஆகாதுல மறந்துட்டேன்" என தெரிவித்துள்ளார்.

Mr சங்கி சாருக்கு கும்பகர்ண தூக்கம் போல.. எடிட் செய்து வீடியோ வெளியிட்ட BJPக்கு ராஜீவ் காந்தி பதிலடி!

மேலும் இது குறித்து பேசி இருக்கும் ராஜீவ் காந்தி, "தி.மு.க-வுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தற்போது பரமக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் முருகேசன். ஆனால் அந்த வீடியோவில் வாலிபர் சொல்லும் பெயர் மனோகரன். இதில் இருந்தே இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது" என கூறியுள்ளார்..

banner

Related Stories

Related Stories