அரசியல்

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்த மூத்த தலைவர்கள்: யார் அந்த 3 பேர்?

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெற்றது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்த மூத்த தலைவர்கள்: யார் அந்த 3 பேர்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ச்சியாக 2 முறை காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியில் வலுவான தலைமை இல்லை என மூத்த தலைவர்களே குற்றம்சாட்டினர். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததால் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்திக்குப் பிறகு பதவியேற்ற ராகுல் காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து மீண்டும் தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்து வருகிறார். இருப்பினும் பா.ஜ.க-வை எதிர்கொள்வதற்கும் அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் கட்சிக்கு வலுவான தலைமை தேவை என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்த மூத்த தலைவர்கள்: யார் அந்த 3 பேர்?

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தலைவர் பதவி குறித்துத் தெளிவான முடிவு எடுத்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தலைவர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்காமல் இருந்தனர்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்த மூத்த தலைவர்கள்: யார் அந்த 3 பேர்?

இதையடுத்து மூத்த தலைவர்கள் அசோக் கெலாட், சசி தரூர், திக்விஜய் சிங், கமல்நாத் போன்ற பலரும் விருப்பம் தெரிவித்து வந்தனர். பின்னர் தலைவர் போட்டியிலிருந்து அசோக் கெலாட் விலகினார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்ததை அடுத்து மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகிய மூன்று பேர் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதனால் தலைவர் பதவிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 17-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே காங்கிரஸ் தலைவர் யார் என அறிவிக்கப்பட உள்ளது.

banner

Related Stories

Related Stories