அரசியல்

“பாஜகவின் வெற்றி அபரிமிதமான வெற்றியல்ல.. தமிழ்நாட்டைப் போல் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இல்லை”: CPM தலைவர்!

பா.ஜ.கவிற்கு கிடைத்த வெற்றி என்பது அபரிமிதமான வெற்றி என்று ஏற்றுக்கொள்ள முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“பாஜகவின் வெற்றி அபரிமிதமான வெற்றியல்ல.. தமிழ்நாட்டைப் போல் எதிர்க்கட்சிகள் ஓரணியில் இல்லை”: CPM தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து பா.ஜ.க 4 மாநிலத்திலும், ஆம் ஆத்மி ஒரு மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த முடிவுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “தற்பொழுது வந்துள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.கவிற்கு கிடைத்த வெற்றி என்பது அபரிமிதமான வெற்றி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. பல தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிப் பெற்ற மாநிலங்களில், தமிழ்நாட்டைப் போல எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் இருந்து ஒற்றுமையை ஏற்படுத்த வில்லை. அதனால், பா.ஜ.க.வின் அதிருப்தி ஓட்டுகள், பல கூறுகளாக பிரிந்ததால் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. இதைத்தவிர வேறொரு முக்கிய காரணம் எதுவுமில்லை.

மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று தேர்தல் ஆணையர் கூறியிருப்பது பா.ஜ.கவை திருப்திப்படுத்த கூறியிருக்கலாம் தவிர அதனைக் கொண்டுவர முடியாது. அதேபோல், தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 2024 ஒரே தேர்தல் வரும் என சொல்வதும், தேர்தல் ஆணையம் அவ்வாறு கூறியது ஏன் என தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படபடவில்லை. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யாமல் ஒரே நாடு ஒரே தேர்தல் வாய்ப்பில்லை.  தேர்தல் ஆணையர் பாஜகவை திருப்திபடுத்த அவ்வாறு கூறியிருக்கலாம். ஒரே நாடு ஒரே தேர்தல் நாங்கள் அடுத்த முறை ஆட்சிக்கு வந்து விடுவோம் என கூறுவதெல்லாம் பகல் கனவு” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories