அரசியல்

”மருத்துவக்கல்லூரி திறப்பு தாமதமானதே உங்களால்தான் என மார்தட்டிக்கொள்ளுங்கள்” - EPSக்கு மா.சு., பதிலடி!

அதிமுகவால்தான் மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது என மார்தட்டி கொள்வதை விட அதிமுகவினரால் காலதாமதம் ஆனது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொள்ளலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.

”மருத்துவக்கல்லூரி திறப்பு தாமதமானதே உங்களால்தான் என மார்தட்டிக்கொள்ளுங்கள்” - EPSக்கு மா.சு., பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சியில் கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டதைதான், தற்போது அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது என அதிமுகவினர் கூறிக்கொள்வதில் எவ்வித நியயமுமில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் வருமான வரம்பு 70 ஆயிரத்திலிருந்து ரூ.1.20 லட்சமாக முதலமைச்சர் உயர்த்தியுள்ளார். முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான சிரமங்கள் களைந்து சென்னையில் 2 இடங்களில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கான மையம் தொடங்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் இன்று 1 மையம் திறக்கப்பட்டுள்ளது, வெகு விரைவில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திறக்கப்படவுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

திமுக பொறுப்பேற்ற பிறகு 382 கோடியே 5 லட்ச ரூபாய் அளவில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 1600 மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு மூலம் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 11 வகையான தொடர் சிகிச்சை, 52 முழு உடல் பரிசோதனை, 8 உயரக சிகிச்சை ஆகியவை அடங்கும். 714 அரசு மருத்துவமனையிலும், 886 தனியார் மருத்துவமனை என மொத்தம் 1600 மருத்துவமனைகளில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகை என்பதால், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது. அடுத்தவாரம் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும், மெகா தடுப்பூசி முகாம் வரை காத்திருக்காமல் வார நாட்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்று கூறினார். முன்களப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதிக்கு முன்பு தடுப்பூசி போட்டவர்கள் என 4 லட்சம் பேர் என்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.

இந்நிலையில் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரிகள் தொடங்குவதற்கு 2011 பிப்ரவரியிலேயே திமுக ஆட்சியில் இருக்கும் போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதிமுக அரசு தாங்கள்தான் கொண்டு வந்ததாக கூறுகிறார்கள், உண்மையிலேயே அதிமுகவால்தான் இது தாமதமானது. அதுமட்டுமின்றி அதிமுகவால்தான் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது என பெருமை கூறுவதை விட அதிமுகவால் தாமதமானது என பழனிச்சாமி கூறிக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories