அரசியல்

இங்க ஒரு செங்கலை எடுத்து வைக்க முடியல; அங்க 5 விமான நிலையங்களா? - தோலுரியும் பாஜக அரசின் பச்சை துரோகம்!

உத்தர பிரதேசத்தில் 5வதாக சர்வதேச விமான நிலையம் அமைக்க இருப்பதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

இங்க ஒரு செங்கலை எடுத்து வைக்க முடியல; அங்க 5 விமான நிலையங்களா? - தோலுரியும் பாஜக அரசின் பச்சை துரோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ம் ஆண்டு உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை இப்போது இருந்தே தொடங்கி இருக்கின்றன. அவ்வகையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என ஆளும் பாஜக பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாக கூறி வருகிறது.

அதன்படி எதிர்வரும் நவம்பர் 25ம் தேதி உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள நொய்டாவில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டவுள்ளார்.

இதுபோக, 13 விமான நிலையங்கள், 7 ஓடுபாதைகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 2012ம் ஆண்டு வரை இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்த உத்தர பிரதேசத்தில் அயோத்தி, குஷிநகர் தற்போது அமையவுள்ள நொய்டா என 5 ஆக அதிகரித்துள்ளது.

இங்க ஒரு செங்கலை எடுத்து வைக்க முடியல; அங்க 5 விமான நிலையங்களா? - தோலுரியும் பாஜக அரசின் பச்சை துரோகம்!

இந்த அளவுக்கு நாட்டின் எந்த மாநிலங்களிலும் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் மட்டும் இத்தனை திட்டங்களை கொண்டு வர மோடி தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் மெனக்கெட்டு வருகிறது என எதிர்க்கட்சிகள் சாடியுள்ளது.

மேலும் பல தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் அமைக்க வெறும் அடிக்கல் நாட்டு விழாவை மட்டும் நடத்திவிட்டு இன்றளவில் ஒரு செங்கலை கூட இன்னும் எடுத்து வைக்காமல் இருக்கும் இதே பாஜக அரசுதான் உத்தர பிரதேசத்தில் தேர்தல் சமயத்தில் விமான நிலையங்களை கட்டி வாக்காளர்களை கவர திட்டமிட்டு வருகிறது.

பன்முகத் தன்மைக் கொண்ட பாரம்பரியமிக்க இந்திய நாட்டில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களை புறக்கணித்துவிட்டு குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியை மோடியின் பாஜக அரசு வாரி இரைத்து வருவது பச்சை துரோகம் என்றும் கடுமையாக சாடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories