அரசியல்

ஜெ., சிகிச்சை; CCTVஐ நிறுத்தச் சொன்னது யார்? அப்போலோவின் பதில் மனுவால் கிளம்பிய சர்ச்சை!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் சிகிச்சை பெற்றிருந்த போது சிசிடிவி சேவையை நிறுத்தச் சொன்னது யார்?

ஜெ., சிகிச்சை; CCTVஐ நிறுத்தச் சொன்னது யார்? அப்போலோவின் பதில் மனுவால் கிளம்பிய சர்ச்சை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் இதுகாறும் அவிழாமல் உள்ளது. அவரது மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இதில், அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜராக விலக்குக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியது. அது தொடர்பான வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை தளத்தின் கண்காணிப்பு கேமிராவை நிறுத்தச் சொன்னது யார் என்றதற்கு அப்போதைய அதிமுக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவும், உளவுத்துறை ஐ.ஜியான சத்யமூர்த்தி ஆகியோர் அறிவுறுத்தியதன் அடிப்படையிலேயே சிசிடிவி சேவை நிறுத்தப்பட்டது என தெரிவித்திருக்கிறது.

இதனையடுத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகத்திடம் அப்போலோ சிசிடிவி நிறுத்தப்பட்டது தொடர்பாக எந்த தகவலும் பதிவேற்றவில்லை என தெரிவித்திருக்கிறது.

அரசிடம் இது தொடர்பாக எந்த தரவும் இல்லை எனில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட தளத்தின் மொத்த கண்காணிப்பு கேமிராவையும் நிறுத்தச் சொன்னது யார் என்ற ஐயப்பாடும் கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.

ஏனெனில் அனுமதிக்கப்பட்டதோ மாநிலத்தின் முதலமைச்சராக பதவியில் இருந்தவர். அப்படி இருக்கையில் திட்டமிட்டே இந்த செயலில் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்கு அதிமுகவினரே ஒத்துப் போயுள்ளது பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

banner

Related Stories

Related Stories