அரசியல்

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பா.ஜ.க தலைவர்: “இந்த பொய்தான் நாட்டை கெடுத்தது” - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பா.ஜ.க இளைஞரணி தலைவரின் செயல் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பா.ஜ.க தலைவர்: “இந்த பொய்தான் நாட்டை கெடுத்தது” - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விளம்பரத்திற்காக பொய் சொல்லி மாட்டிக்கொண்ட பா.ஜ.க இளைஞரணி தலைவரின் செயல் கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

பா.ஜ.கவினர் பொய்களையே தங்களது பிரச்சார உத்தியாகக் கையாண்டு வருகின்றனர். பிரதமர் மோடியும் குஜராத் கட்டுக்கதைகளைப் பயன்படுத்தியே ஆட்சிக்கு வந்தார். அவரைப் பின்பற்றி பா.ஜ.கவினர் பலரும் பொய்க்கதைகளைப் பரப்பி அம்பலப்பட்டு வருகின்றனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த சங்கவி எனும் மாணவியைச் சந்தித்த பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் அதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தான் மாணவி சங்கவியைச் சந்தித்து வாழ்த்தியதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், சங்கவி குடும்பத்தினரோடு எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த வினோஜ், “மோடியின் மக்கள் நலத் திட்டங்களின் சாதனையை மறக்க முடியாது. சங்கவியின் குடும்பத்திற்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மின்சார வசதியோடு வீடு கட்டப்பட்டது” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சங்கவியின் காப்பாளரான சிவா என்பவர், “உங்கள் கேவலமான அரசியலை இங்கே விளையாடாதீர்கள். சங்கவியின் தந்தை இறந்தபிறகு அவரது கார்டியனாக பொறுப்பெற்று நான் எனது நண்பர்கள், N3 பவுண்டேசன், கோவை மெரிடியன், கிரீன்சிட்டி ஆகிய ரோட்டரி கிளப்புகள்,சாய்பாபா சமிதி குனியமுத்தூர் உள்ளிட்டோரின் உதவியால்தான் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டது. இந்த பொய்தான் நாட்டைக் கெடுத்தது.” என ரிப்ளை செய்தார்.

தான் பொய் சொல்லி மாட்டிக்கொண்டதை உணர்ந்த பா.ஜ.க பா.ஜ.க இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம் அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.

மாணவியை சந்தித்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட வினோஜ், விளம்பரத்திற்காக பொய்யான தகவலை வெளியிட்டது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories