அரசியல்

ஒரு மாவட்டக் கவுன்சிலர் பதவிக் கூட கிட்டவில்லை; தனித்து போட்டியிட்டும் தவிடுபொடியான பா.ம.கவின் கனவு!

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பா.ம.க.வுக்கு ஒரு மாவட்டக் கவுன்சிலர் பதவி கூட கிடைக்காதது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாவட்டக் கவுன்சிலர் பதவிக் கூட கிட்டவில்லை; தனித்து போட்டியிட்டும் தவிடுபொடியான பா.ம.கவின் கனவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ம.க. சட்டமன்றத் தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ம.க., அக்கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சி தேர்தலை சந்திக்கப் போவதாக திடீரென அறிவித்தது.

ஒரு மாவட்டக் கவுன்சிலர் பதவிக் கூட கிட்டவில்லை; தனித்து போட்டியிட்டும் தவிடுபொடியான பா.ம.கவின் கனவு!

வட மாவட்டங்களில் கணிசமான வெற்றி வாய்ப்பை பா.ம.க. பெறும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாசும் கூறி வந்தார்.

ஆனால் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. எதிர்பார்த்த வெற்றியை கூட பெற முடியவில்லை. மாவட்டக் கவுன்சிலர் பதவியில் ஒரு இடத்தை கூட பா.ம.கவால் பிடிக்க முடியாமல் போனது. வட மாவட்டங்களில் தனித்து போட்டியிட்டால் எதிர்பார்த்த வெற்றியை பெறலாம் என்ற பா.ம.கவின் கனவு தவிடு பொடியானதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்த நிலையில், நாம் தமிழர், ம.நீ.ம. கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. இது இந்த கட்சிகளுக்கு அரசியலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ம.க.வும் அந்த வரிசையில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- முரசொலி நாளேடு

banner

Related Stories

Related Stories