அரசியல்

இது அடிபணியும் ஆட்சி கிடையாது; கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கே அழுத்தம் தேவை - BJPக்கு சேகர்பாபு தக்க பதிலடி

கோவில்கள் திறக்க பாஜக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அக்கட்சி கூறுவது குறித்த கேள்விக்கு, கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்குதான் அழுத்தம் தேவைப்படும் என சாடியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

இது அடிபணியும் ஆட்சி கிடையாது; கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கே அழுத்தம் தேவை - BJPக்கு சேகர்பாபு தக்க பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அனைத்து மதத்தினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் வழிபாட்டு தளங்கள் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சரை மக்கள் நெஞ்சம் நிறைந்து பாராட்டி வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பாக இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து நாட்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என அறிவித்த முதலமைச்சருக்கு மக்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் என்றும், கோயில்களில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும் கோயில்களில் பொதுமக்கள் கூட்டமின்றி சுவாமி தரிசனம் செய்து வருவதாக கூறிய அமைச்சர், சூழ்நிலைக்கேற்ப சாமிக்கு ஆரத்தி காட்டுவது, பிரசாதம் வழங்குவது குறித்து கோயில் நிர்வாகங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் கோயில்களில் குடமுழக்கு நடத்துவது குறித்து ஏற்கனவே முதலமைச்சர் ஆய்வு நடத்தி உள்ளார் என்றும், விரைவில் இதுதொடர்பாக முதல்வர் வெகு விரைவில் நல்ல முடிவு அறிவிப்பார் என்றார்.

அனைத்து மதத்தினரும் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் வழிபாட்டு தளங்கள் திறக்க உத்தரவிட்ட முதலமைச்சரை அனைத்து மதத்தினரும் நெஞ்சம் நிறைந்து பாராட்டி வருகின்றனர். மேலும் கோவில்கள் திறக்க பாஜக கொடுத்த அழுத்தம் தான் காரணம் என அக்கட்சி கூறுவது குறித்த கேள்விக்கு, கட்டுப்பாடு இல்லாத ஆட்சிக்குதான் அழுத்தம் தேவைப்படும்; ஆய்வு கூட்டம் நடத்திய பிறகே கோயில்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அழுத்ததிற்கு அடிபணியும் ஆட்சி கிடையாது என்றும், மக்களுக்கு அழுத்தம் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது பாஜகவிற்கு கிடைத்த வெற்றி என்று அவர்கள் கூறுவதற்கு பதில் அளித்த அமைச்சர், கோயில்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது; மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது என்றும், கனிந்த கனியை தடியால் அடித்து விழ வைப்பது போல் இருக்கிறது அவர்கள் கூறுவது என்று கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்வி நிறுவனங்களில், கோயில் வருவாயில் செல்லும் சம்பளம் இந்துக்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயங்கும் கல்லூரிகளில் இந்துக்கள் மட்டும் பணிக்கு நியமிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories