அரசியல்

சசிகலா குடும்பத்தை விரட்டும் மோசடி வழக்குகள்: MLA சீட்-க்காக ரூ.5 கோடி அபேஸ்; இளவரசி மருமகன் மீது புகார்!

எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாயை பெற்று கொண்டு சீட் வாங்கி தராமலும் மற்றும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

சசிகலா குடும்பத்தை விரட்டும் மோசடி வழக்குகள்: MLA சீட்-க்காக ரூ.5 கோடி அபேஸ்; இளவரசி மருமகன் மீது புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அவர்களின் அண்ணன் மனைவி இளவரசியின் இரண்டாவது மருமகன் மீது பண மோசடி செய்ததாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது சேலம் மாவட்ட சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக கூறி சுமார் 5 கோடி ரூபாயை பெற்று கொண்டு சீட் வாங்கி தராமலும் மற்றும் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியது சம்மந்தமாக இளவரசியின் இரண்டாவது மருமகனான ராஜராஜான் மீது சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர் கருணாகரன் என்பவர் சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஜெ.பரத் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை அக்டோபர் மாதம் 5ம் தேதிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதாக உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories