அரசியல்

”பெரிய மீனே வந்து சிக்கியிருக்கு; இத நான் எதிர்ப்பாக்கலையே” - ஜெயக்குமாருக்கு அமைச்சர் PTR சரவெடி பதிலடி!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் விமர்சனங்களுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பதிலடி வைரலாகியுள்ளது.

”பெரிய மீனே வந்து சிக்கியிருக்கு; இத நான் எதிர்ப்பாக்கலையே” - ஜெயக்குமாருக்கு அமைச்சர் PTR சரவெடி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அண்மையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்கு தான் ஏன் செல்லவில்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் விளக்கம் கொடுத்திருந்தார்.

அதுபோக, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கும், ஒன்றிய நிதியமைச்சருக்கும் 14 பக்கம் கொண்ட விளக்க அறிக்கையையும் அவர் அனுப்பியிருக்கிறார். அந்த விளக்க அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இவை ஏதும் தெரியாமலேயே சமூக வலைதளங்களில் அதிமுக பாஜகவைச் சேர்ந்த சில அறிவார்ந்த கூட்டங்கள் அவசியமில்லாமல் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து வதந்திகளை பரப்பி வருகின்றன.

ஆனால் அமைச்சர் பிடிஆர் அதற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார். மேலும் அந்த பதிலடி பதிவும் பெருமளவில் இணையத்தில் வட்டமடித்ததோடு வதந்தி பரப்புவோருக்கு தக்க பதிலடியை அமைச்சர் கொடுத்திருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சரான ஜெயக்குமார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லாதது குறித்து விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

ஜெயக்குமாரின் விமர்சனத்துக்கு தனக்கே உரிய பாணியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ட்விட்டரில் சரவெடியாக பதிலடியை கொடுத்துள்ளார்.

அதில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மற்றும் கவுன்சிலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நான் அனுப்பிய 14 பக்க அறிக்கையை பகிர்வதற்கு முன்பு, சில பெரியர்வர்களுக்கும் முட்டாள்களுக்கும் கவுன்சிலின் விதிகளை பற்றிய அறியாமையை வெளிக்கொணர காத்திருந்தேன்.

ஆனால், அந்த வலையில் முன்னாள் அமைச்சரே சிக்குவார் என எதிர்ப்பார்க்கவில்லை. மேலும் பல வேடிக்கைகளை எதிர்ப்பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுபோக, நிதித்துறை செயலாளர் சார்பாக என்னுடைய கருத்துகளும் ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

banner

Related Stories

Related Stories