அரசியல்

உ.பி., குஜராத்தில் அதிகரித்த நன்கொடை கட்சிகளுக்கு காத்திருக்கும் வேட்டு - தேர்தல் ஆணையம் அதிரடி!

தேர்தலில் போட்டியிடாமல் நன்கொடை வசூலிக்க மட்டும் கட்சி நடத்தும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்துசெய்ய அனுமதி வழங்க வேண்டும் என சட்டத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது தேர்தல் ஆணையம்.

உ.பி., குஜராத்தில் அதிகரித்த நன்கொடை கட்சிகளுக்கு காத்திருக்கும் வேட்டு - தேர்தல் ஆணையம் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேர்தலில் போட்டியிடாமல் நன்கொடை பெறுவதற்காக மட்டும் கட்சி நடத்தும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு அனுமதி கோரி சட்டத்துறைக்கு கடிதமும் எழுதியுள்ளது.

அதில், தற்போது நாடு முழுதும் சுமார் 2700 கட்சிகள் உள்ளன. இவற்றில் 7 தேசிய கட்சிகள், 50 மாநில கட்சிகள் மட்டுமே தேர்தலில் முழுமையாகப் பங்கேற்கின்றன. மற்ற கட்சிகளில் 500 கட்சிகள் ஓரளவுக்கு தேர்தலில் போட்டியிடுகின்றன. ஏனைய கட்சிகள் தேர்தலில் பங்கேற்பதில்லை.

இந்த கட்சிகள் வசூலிக்கும் நன்கொடை அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற கட்சிகளில் அதிக அளவு உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளதாகவும், அதிக நன்கொடை வசூலிக்கும் கட்சிகள் குஜராத்தில் உள்ளதாகவும் கணக்குகள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்லமல், கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 112 ஆகவும், 2019ம் ஆண்டில் 2,301 ஆகவும் இருந்தது. தற்போது அதன் எண்ணிக்கை 2,700 ஆக உள்ளது. இப்படி அங்கீகரிக்கப்படாத கட்சிகள் 2018-19ல் 65 கோடி ரூபாயும், 2017-18ல் 24.6 கோடி ரூபாயும் நன்கொடையாக பெற்றிருக்கிறது.

இதனால், தேர்தலில் போட்டியிடாமல் நன்கொடை வசூலிக்க மட்டும் கட்சி நடத்தும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்துசெய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ஒன்றிய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

முன்னதாக தேர்தல் நிதி பத்திரங்களின் மூலம் 2019-20-ம் ஆண்டில் ஒன்றிய அரசை ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் ரூ.2,555 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories