அரசியல்

10 வருஷாம சும்மா இருந்துட்டு நீலிக் கண்ணீர் வடிப்பதா? - அதிமுகவை சரமாரியாக சாடிய கே.பாலகிருஷ்ணன்!

பத்தாண்டு காலம் எதையும் நிறைவேற்றாத அதிமுகவினர், தற்போது மக்களுக்காக குரல் கொடுப்பதைப்போல நீலிக்கண்ணீர் வடிப்பதாக கே. பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.

10 வருஷாம சும்மா இருந்துட்டு நீலிக் கண்ணீர் வடிப்பதா? - அதிமுகவை சரமாரியாக சாடிய கே.பாலகிருஷ்ணன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் கடந்த மூன்று நாட்களாக சென்னையில் நடைபெற்றது. அதில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக, அவர்களது மக்கள் விரோத போக்கை கண்டித்து பல்வேறு போராட்டங்களை தோழமைக் கட்சிகளோடு சேர்ந்து நடத்தியுள்ளோம். அதன் மூலம் உருவான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, நடந்துமுடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றிருக்கிறது. ஆட்சி மற்றத்திற்கு உதவிய தமிழக மக்களுக்கு நன்றி.

அதேநேரம் பாஜக அரசாங்கம் மிகமோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாள்தோறும் மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே தொழிலாளர் உரிமைகளுக்கு விரோதமான சட்டங்கள், மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த முறை ஔிப்பதிவு திருத்தச்சட்டம், கடல் வள ஒழுங்காற்றுச் சட்டம் போன்றவை நிறைவேற்றப்பட உள்ளன.

ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறைகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதை எதிர்த்தும், சமூக செயற்பாட்டாளர்கள் மீது உபா போன்ற கொடூர சட்டங்களை ஏவுவதற்கு எதிராகவும் தொடர்ந்து உறுதியாக பாேராட தமிழ்நாட்டில் விரிவான எதிர்ப்பு அணியை உருவக்க உரிய பங்கினை ஆற்ற தீர்மானித்துள்ளோம்.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து திமுக அரசு பல்வேறு நல்ல நவடிக்கைகளை எடுத்துள்ளது. தொடர்ந்து எடுப்பதாகவும் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். பல்வேறு வழக்குகளை திரும்ப பெற்றுள்ளனர். அதேபோல பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது, பாலியல் குற்றங்களை தடுப்பது உள்ளிட்டவற்றில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நகர்புறத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க ரங்கராஜன் குழு அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களில் திமுகவுடன் இணைந்து நிற்பது மட்டுமின்றி, தமிழ்நாட்டில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகவும் எங்களுடைய அணுகுமுறை இருக்கும்.

10 வருஷாம சும்மா இருந்துட்டு நீலிக் கண்ணீர் வடிப்பதா? - அதிமுகவை சரமாரியாக சாடிய கே.பாலகிருஷ்ணன்!

அதிமுகவுக்குள் ஏகப்பட்ட கோஷ்டி மோதல்கள் ஏற்பட்டுள்ளன. அதனை தீர்த்துக்கொள்ள டெல்லிக்கு பயணப்படும் நிலை அவர்களுக்கு உருவாகியுள்ளது. இந்த நாட்டின் பிரதமர் அவர்களது கூட்டணித் தலைவரா அல்லது அதிமுகவுக்கு தலைவரா என்று தெரியவில்லை. இதன் மூலம் அதிமுக எவ்வளவு பலவீனம் ஆகியுள்ளது என்பது தெரிய வருகிறது. இன்னொரு பக்கம் அவர்கள் ஏதோ பலமாக இருப்பது போல காட்ட மக்கள் பிரச்சனைகள் குறித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் எவ்வளவோ நிறைவேற்றியிருக்கலாமே! அதையெல்லாம் செய்யாமல் இன்று மக்கள் பிரச்சனையில் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

பத்தாண்டு காலமாக அதிமுக அமைச்சர்கள் செய்துள்ள முறைகேடுகள் குறித்து உரிய நீதி விசாரணை நடத்திட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இதுபோன்ற கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி சுயமாகவும், தோழமைக் கட்சிகளோடும் தொடர்ந்து போராடும். குறிப்பாக, கியூபா நாட்டிற்கு எதிரான அமெரிக்க அரசின் அடக்குமுறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து வரும் 29ஆம் தேதி சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட உள்ளோம். மேலும் கடல்வள ஒழுங்காற்று சட்டமசோதா நிறைவேற்றுவறை கண்டித்து எதிர்ப்பு இயக்கம் ஒன்றையும் நடத்த உள்ளோம்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட ஏராளமான வாக்குறுதிகளை என்றைக்குமே அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்குள் திமுக அரசு அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்? அப்படி கேட்பதற்கான தார்மீக உரிமை அதிமுகவுக்கு இல்லை. கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக மோடி சொன்னாரே அது குறித்து கேட்டார்களா?" என்றார்.

banner

Related Stories

Related Stories