அரசியல்

தி.மு.க தலைவர் முன்னிலையில் கட்சியில் இணைந்த மகேந்திரன், பத்மபிரியா... கழகத்தில் இணையும் 11 ஆயிரம் பேர்!

தி.மு.கவில் இணையவுள்ள 11 ஆயிரம் உறுப்பினர்களின் விவரங்கள் கொண்ட தொகுப்பையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அளித்தார் மகேந்திரன்.

தி.மு.க தலைவர் முன்னிலையில் கட்சியில் இணைந்த மகேந்திரன், பத்மபிரியா... கழகத்தில் இணையும் 11 ஆயிரம் பேர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணைந்தார். மேலும், தி.மு.கவில் இணையவுள்ள 11 ஆயிரம் உறுப்பினர்களின் விவரங்கள் கொண்ட தொகுப்பையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அளித்தார்.

மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவராக இருந்து விலகிய டாக்டர் ஆர்.மகேந்திரன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.கவில் இணைத்துக் கொண்டார். இவர் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டவர்.

மக்கள் நீதி மய்யத்தின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளராக இருந்த பத்மபிரியாவும் தி.மு.க-வில் இணைந்துள்ளார். இவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ம.நீ.ம சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டவர்.

மகேந்திரன் உள்ளிட்டோர் தி.மு.க-வில் நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும்,தி.மு.க முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலாரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

தி.மு.க-வில் தன்னை இணைத்துக்கொண்ட ஆர்.மகேந்திரன், “தி.மு.கவில் இணைந்தது மகிழ்ச்சி; தி.மு.கவின் கொள்கைகளே எனது சித்தாந்தமாக இருந்தது. தி.மு.க-வின் சாதாரண தொண்டனாகச் செயல்படுவேன்” எனப் பேசினார்.

தி.மு.க-வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகேந்திரன், “பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க கடந்த 2 மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செயல்பாடு.

என்னுடன் 78 நிர்வாகிகள் இணைந்துள்ளனர். மேலும், தி.மு.கவில் இணையும் சுமார் 11 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட பட்டியலும் தி.மு.க தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று இல்லையென்றால் அனைவரும் இணையும் நிகழ்வை கோவையில் பெரிய அளவில் நடத்தியிருப்போம்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories