அரசியல்

கொள்ளை நோய் காலத்தில் கூட இந்திக்கு அடம்பிடிக்கும் மோடி அரசு : மற்ற மொழிகள் மீது ஏன் காழ்ப்பு?

பெருந்தொற்றுக் காலத்தில் கூட அனைத்து மக்களுக்கும் புரியும்படி பேசாமல் இந்தியில் மட்டும் பிரதமர் மோடி உரையாற்றியது பெரும் சர்ச்சையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை நோய் காலத்தில் கூட இந்திக்கு அடம்பிடிக்கும் மோடி அரசு : மற்ற மொழிகள் மீது ஏன் காழ்ப்பு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை முன்னெடுத்து வருகிறது. அதேவேளையில், கொரோனா நடவடிக்கைகள் குறித்து அக்கறை காட்டாமல், கடந்த சில மாதங்களாக தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக இருந்த பிரதமர் மோடி, நேற்று திடீரென நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.

பிரதமர் மோடியின் உரையால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நாட்டு மக்களுக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிச்சம். அதற்கு காரணம், கொரோனா பரவலால் மீண்டும் பொருளாதார சிக்கலை சந்திக்கும் ஏழை மக்களுக்கு ஏதேனும் உதவியோ, தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் ஏதேனும் அறிவிப்போ வெளிவரும் என நினைத்துக் காத்திருந்த நிலையில், அறிவுரையை மட்டும் கூறிவிட்டுச் சென்றுள்ளார் பிரதமர் மோடி. அதுவும் இந்தியில் மட்டுமே பேசியிருக்கிறார்.

பெருந்தோற்றுக் காலத்தில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதிலாக, பிரதமர் மோடியோ வெறும் அறிவுரைகளை மட்டும் வழங்கியுள்ளார். அதையும் முழுவதுமே இந்தியில் தான் பேசுவேன் என பிடிவாதத்தோடு பேசியுள்ளதாகத் தெரிகிறது.

கொள்ளை நோய் காலத்தில் கூட இந்திக்கு அடம்பிடிக்கும் மோடி அரசு : மற்ற மொழிகள் மீது ஏன் காழ்ப்பு?

டெலிபிராம்ப்டர் உதவியுடன் பேசும் பிரதமர் மோடி, அனைத்து மாநில மக்களுக்கும் புரியும்படி ஆங்கிலத்தில் பேசியிருக்கலாம். அல்லது பிரதமர் பேச்சு முன் தயாரிப்பு என்பதால் அந்தந்த மாநில மொழிகளில் கீழே குறிப்பிட்டிருக்காலம்.

குறிப்பாக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி, வானொலிகளில் கூட மொழிபெயர்ப்பு செய்து மோடியின் பேச்சு வரவில்லை என்று பலரும் வேதனை தெரிவித்துள்ளனர். அனைத்து மக்களுக்கும் தனது பேச்சு செல்லவேண்டும் என பிரதமர் மோடியே விரும்பவில்லை என்பதைக் காட்டும் விதமாகவே அவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளதாக பலரும் விமர்சித்து வருகிறனர். அதுமட்டுமல்லாது பிரதமர் மோடிக்கு பிற மொழிகள் மீது காழ்ப்பு உள்ளதாகவும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

banner

Related Stories

Related Stories