அரசியல்

பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ள தமிழகம் எப்படி வெற்றி நடை போடும்? - தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர் கேள்வி!

தமிழகத்தில் 10.59 சதவிகிதத்தில் இருந்த மாநில வருவாய், அதிமுக ஆட்சியில் 7 சதவிகிதமாக குறைந்துள்ளது என திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் எம்.எல்.ஏவுமான பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ள தமிழகம் எப்படி வெற்றி நடை போடும்? - தி.மு.க எம்.எல்.ஏ பி.டி.ஆர் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை அன்பகத்தில் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, திமுக ஆட்சி காலத்தில் 100 ரூபாய் உற்பத்தியானால், மாநிலத்திற்கு 10.59 ரூபாய் வருவாயாக இருந்த நிலை, ஜெயலலிதா ஆட்சியில் 9.62 ரூபாயாக ஆக குறைந்தது என்றார். இது, தற்போதைய ஆட்சியில் 7.20 ரூபாயாக குறைந்து போயுள்ளது என்று தியாகராஜன் குறிப்பிட்டார்.

அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 1 லட்சத்து 31 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் 2012-13 காலகட்டத்திற்கு முன் வருவாய் மிகை மாநிலமாக இருந்த தமிழகம் அதன் பின்னர் வருவாய் பற்றாக்குறை மாநிலமாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார வீழ்ச்சி பற்றி பதினான்காவது நிதிக்குழு அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பழனிவேல் தியாகராஜன் விளக்கினார்.

தமிழகம் வாங்கியுள்ள கடனால் கடந்த 10 ஆண்டுகளாக 2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் வட்டியாக மட்டும் செலுத்தியுள்ளது தமிழக அரசு என அவர் தெரிவித்தார்.

2005-2011-ஆம் ஆண்டு வாக்கில் 10.9 % இருந்த தொழில் வளர்ச்சி, 2011-இல் இருந்து 2017 வரை 4.6 சதவீதமாக குறைந்துள்ளது என கூறிய பழனிவேல் தியாகராஜன்,வெற்றி நடை போடும் தமிழகம் என்று அதிமுக அரசு பொய் பிராச்சாரம் செய்து வருவதாக குறிப்பிட்டார்.

banner

Related Stories

Related Stories