அரசியல்

திமுக பரப்புரை எதிரொலி: தோல்வி பயத்தில் மதுரை கூட்டுறவு ஆலை நிலுவைத் தொகையை வழங்க ஆணையிட்ட அதிமுக அரசு!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையின் மூலம் மதுரை சர்க்கரை கூட்டுறவு ஆலைக்கான நிலுவைத் தொகை குறித்த குறைகளை விவசாயிகள் கூறியதை அடுத்து தோல்வி பயத்தில் ஆடிப்போயுள்ளது அதிமுக அரசு.

திமுக பரப்புரை எதிரொலி: தோல்வி பயத்தில் மதுரை கூட்டுறவு ஆலை நிலுவைத் தொகையை வழங்க ஆணையிட்ட அதிமுக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையின் போது அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை கூட்டுறவு நிலுவைத்தொகை தொடர்பாக குறும்படம் வெளியிடப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை சுட்டிக்காட்டி அரசின் அவலத்தை எடுத்துக் கூறினார். இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய சர்க்கரை கூட்டுறவு ஆலையின் நிலுவைத் தொகை 11 கோடியே 93 லட்ச ரூபாய் விவசாயிகளுக்கு வழங்க அதிமுக அரசு உத்தரவிடப்பட்டுள்ளது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சர்க்கரை கூட்டுறவு ஆலையில் கடந்த 2008 - 09 மற்றும் 2015 - 16 ஆகிய ஆண்டுகளில் ஆலைக்கு கரும்பு வழங்கிய 4,273 விவசாயிகளுக்கான நிலுவை தொகையான 11 கோடியே 93 லட்சம் ரூபாயை சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

அதன்படி விவசாயிகளின் வங்கி கணக்கில் கரும்புக்கான நிலுவை தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்கி வருகின்றது. சம்பந்தப்பட்ட விவசாயிகள் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்து இருந்தாலோ அல்லது முறையான வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் மற்றும் இறந்த விவசாயிகளின் வாரிசுகள் உரிய ஆவணங்கள் கொடுத்து தங்களுக்கான நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்ளலாம் என சர்க்கரை ஆலையில் தோட்ட இயக்குநரும் மாவட்ட வருவாய் அலுவலர் வசந்தராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 17ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை பகுதியில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள பிரச்சனை குறித்த தொகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் முதல் தொகுப்பாக சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கான கரும்பு நிலுவைத் தொகை மற்றும் ஆலை மூடி இருப்பது குறித்த அப்பகுதி விவசாயிகள் கோரிக்கையுடன் தொகுப்பு ஒளிபரப்பானது இந்தநிலையில் உடனுக்குடன் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த தொகைகள் விவசாயிகளுக்கு தமிழக அரசு விடுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

banner

Related Stories

Related Stories